சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெருங்கிவிட்டோம்.. கொரோனா பெருந்தொற்று முடிகிறது! அமெரிக்க சைன்டிஸ்ட் சொன்ன குட்நியூஸ்.. பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: விரைவில் கொரோனா பரவல் முடிய போகிறது என்று அமெரிக்காவின் பிரபல சைன்டிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தொடர்பான நம்பிக்கை அளிக்க கூடிய செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. என்னதான் ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் வந்த வேகத்தில் இது உச்சத்தை அடைந்து உடனடியாக கேஸ்கள் குறைந்தும் வருகிறது. இந்தியாவிலும் கூட டெல்லி, மும்பையில் கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வரும் நாட்களிலும் இதேபோல் கொரோனா கேஸ்கள் குறைந்து 3ம் அலை முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா சிகிச்சையில் 'கேம் சேஞ்சர்;.. 2 புதிய மருந்துகள் பரிந்துரை- WHO உத்தரவு இதனால் தான் முக்கியம்கொரோனா சிகிச்சையில் 'கேம் சேஞ்சர்;.. 2 புதிய மருந்துகள் பரிந்துரை- WHO உத்தரவு இதனால் தான் முக்கியம்

கொரோனா பெருந்தொற்று

கொரோனா பெருந்தொற்று

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று குறித்து அமெரிக்காவின் பிரபல மருத்துவர், ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட் குதுப் முகமது அளித்த பேட்டியில், இந்த கொரோனா பரவல் முடிய போகிறது. நாம் அந்த கட்டத்தை நெருங்கிவிட்டோம். இது இப்படியே போய்க்கொண்டே இருக்க முடியாது. கொரோனா பரவிக்கொண்டே இருக்க முடியாது. முடிவு நெருங்கிவிட்டது. இந்த கொரோனா பரவலில் வெற்றியாளர், தோல்வியாளர் என்று யாரும் கிடையாது.

கொரோனா எப்போது முடியும்

கொரோனா எப்போது முடியும்

ஆம் இந்த மேட்ச் டிரா ஆக போகிறது. கொரோனா இனி ஒளிந்து கொள்ளும். நாம் வெளியே வர போகிறோம். இவ்வளவு நாட்கள் உள்ளே முடங்கி இருந்த நாம் வெளியே வர போகிற நேரம் வந்து விட்டது.. மாஸ்க் என்ற முகமூடியை நாம் துறக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. இந்த வருடத்தில் நாட்கள் செல்ல செல்ல கொரோனா பரவல் மொத்தமாக முடியும் என்று.நினைக்கிறேன். இது ஒரு கேம் போன்றதுதான். கொரோனா கேஸ்கள் பரவ பரவ அது உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று கொரோனா உருமாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். அதாவது ஒரு கேம் போல நடக்கும். ஆனால் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க முடியாது. இந்த கேம் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது. இனியும் கொரோனா புதிய புதிய வடிவத்தில் மனிதர்கள் இடையே பரவும் வாய்ப்பு இல்லை.

வேக்சின் முக்கியம்

வேக்சின் முக்கியம்

இது மனித சமுதாயத்தில் மிகப்பெரிய சாதனை. தனிப்பட்ட வகையில் இந்திய மருத்துவ உலகிற்கும் இது பெரிய சாதனை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வேக்சின்கள் உலகம் முழுக்க பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பரவலை தடுப்பதில் இந்தியா மிக முக்கியமான நாடாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஏற்கனவே 60 சதவிகித மக்களுக்கும் மேல் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை.

இந்திய வேக்சின்

இந்திய வேக்சின்

வரும் நாட்களில் உலகம் முழுக்க புதிய உருமாறிய கொரோனா வரலாம். ஆனால் அதை பார்த்து நாம் அஞ்ச கூடாது. தொடர்ந்து வேக்சின் போடுவது, பூஸ்டர் போடுவதன் மூலம் நாம் கொரோனா பரவலை, புதிய உருமாற்றங்களை தடுக்க முடியும். மொத்தமாக எல்லோருக்கும் வேக்சின் போடப்படும் பட்சத்தில் மொத்தமாக கொரோனா பரவலை தடுக்க முடியும். அதேபோல் தேவையான நபர்களுக்கு நாம் பூஸ்டர் டோஸ்களும் போட வேண்டும்.

Recommended Video

    Tamilnadu Lockdown: increases fine for not wearing masks | OneIndia Tamil
    பாதுகாப்பு நடவடிக்கை

    பாதுகாப்பு நடவடிக்கை

    ஏற்கனவே வேக்சின் போட்டவர்களுக்கும் கொரோனா வரலாம். ஆனால் அவர்களுக்கு மோசமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. வேக்சின், மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகியவற்றை முறையாக கடைபிடிக்கும் நிலையில் இன்னும் சில நாட்களில் மொத்தமாக இந்த பரவலில் இருந்து நாம் வெளியேறி விடுவோம் என்று ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட் குதுப் முகமது தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus; When will this long pandemic end? US Scientist and Virologist gives a good news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X