பாத்ரூமில் வைத்து..6 மாதங்களாக சிதைக்கப்பட்ட 8 வயது சிறுமி! “அங்கேயே” மிதித்த பொதுமக்கள்! என்னா அடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை அருகே 8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

விருதுநகரில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, வேலூரில் இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, சென்னையில் சிறுமி பாலியல் பலாதகாரம் என 6 மாதத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் அதிர்ந்து போயுள்ளனர் பொதுமக்கள்.

சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் அதிர்ச்சி

இதுமட்டுமல்லாமல் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி ஒருவர் குளிக்கும் போது அண்ணன் முறை உறவினர் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சென்னை அருகே 8 வயது சிறுமிக்கு 6 மாதகாலமாக பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மாநகராட்சி துப்புரவு பணியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பறையில் கொடுமை

கழிப்பறையில் கொடுமை


சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொது கழிப்பறைக்குள் நேற்று மாலை 50 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு உள்ளே சென்ற நபர்கள் சிலர், சிறுமியிடம் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த நபரை அடித்து இழுத்து வந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொழிலாளி கைது

தொழிலாளி கைது

கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையில் அந்த நபர் ஆலந்தூர் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன்(49) என்பதும், இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 8 மாத காலமாக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

கடந்த ஆறு மாத காலமாக சிறுமியிடம் பழகுவது போல பேசி பொது கழிப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதும்தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ வழக்கு பதிந்து ராஜனை கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 8 வயது சிறுமிக்கு 49 வயதான நபர் 6 மாத காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+