கலை அறிவியல் படிப்புக்கு போட்டா போட்டி.. இன்று அரசு கல்லூரி இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 29 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டில் தற்போது அரசால் இயக்கப்படும் கலை மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை 164 ஆக உள்ளது.

இளநிலை படிப்புகளில் 1.73 லட்சம் இடங்கள் இந்த அரசு கலை கல்லூரிகளில் உள்ளன. மாணவர்களை இந்த இடங்களில் சேர்க்க கடந்த மே 8 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக விண்ணப்ப பதிவு தொடங்கியது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்காக ஏராளமான மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணைய முகவரியில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தார்கள்.
சுமார் இரண்டரை லட்சம் மாணவ மாணவிகள் 1.73 லட்சம் இடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1.28 லட்சம் மாணவிகளும் 1.15 லட்சம் மாணவர்களும் 3 ஆம் பாலினத்தவர்கள் 78 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழி கல்விக்காக தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆங்கில மொழி கல்விக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண், மற்ற இளநிலை படிப்புகளுக்கு இதர 4 பாடங்களில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தனியாக வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்படது. இதில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. ஜூன் 1 முதல் 10 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 12 முதல் 20 ஆம் தேதி வரை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூன் 31 ஆம் தேதி கலந்தாய்வு நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் சீட் பெறும் மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.












Click it and Unblock the Notifications