சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியே இருந்தால் ஆபத்து தான்..அடுத்துவரும் பெருந்தொற்றுக்கு தயாராகுங்க..ரெட் கிராஸ் பகீர்வார்னிங்!

இந்த நூற்றாண்டில் பருவ நிலை தொடர்பான பேரழிவுகளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது என்று செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: உலகம் அடுத்து வரும் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள எந்த வித தயார் நிலையும் இன்றி இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் வரும் சுகாதார நெருக்கடி பருவநிலை தொடர்பான பேரழிவுகளுடன் மோதிக்கொள்ளும். அதாவது பருவ நிலை பாதிப்பும் தொற்றும் இணைந்தே வரக்கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோய் உலகம் முழுவதும் அடுத்த சில மாதங்களில் வியாபித்தது.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் கடுமையாக திணறின. நூற்றாண்டில் உலகம் கண்டிராத ஒரு பெரும் நோயாக இந்த வைரஸ் பரவியதால் கடுமையான பொருளாதார சந்திப்பு, உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

 கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்? விரைவில் நல்ல செய்தி சொல்லப்போகும் WHO? தீவிர ஆலோசனை கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்? விரைவில் நல்ல செய்தி சொல்லப்போகும் WHO? தீவிர ஆலோசனை

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் கடுமையாக பாதித்து விட்டது. பயணக்கட்டுப்பாடுகள், பொது முடக்கம் என மக்களை மனதளவிலும் உடல் அளவிலும் ஒரு சேர பாதிக்கும் நோயாக கொரோனா ஆட்டம் காண வைத்தது. அதன்பிறகு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து அதிக அளவில் செலுத்தப்பட்ட பிறகே தொற்று நோயின் தீவிரம் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு படிப்படியாக திரும்பியிருக்கிறது.

செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை

செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை

இந்த நிலையில், உலகம் அடுத்து வரும் பெருந்தொற்று நோயை எதிர்கொள்ள ஆபத்தான முறையில் எந்த வித தயார் நிலையும் இன்றி இருப்பதாக என்று செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் வரும் சுகாதார நெருக்கடி பருவநிலை தொடர்பான பேரழிவுகளுடன் மோதிக்கொள்ளும் அதாவது பருவ நிலை பாதிப்பும் தொற்றும் இணைந்தே வரக்கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது என்று எச்சரித்துள்ளது.

எந்த வித தயார் நிலையும் இன்றி

எந்த வித தயார் நிலையும் இன்றி

இது தொடர்பாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் கூட்டமைப்பான (IFRC) கூறியிருப்பதாவது: - கொரோனா பெருந்தொற்றின் கோரமான 3 ஆண்டுகளை சந்தித்த போதும் வலுவான தயார் நிலைகள் எதுவும் இல்லை. அடுத்து வரும் நெருக்கடியை எதிர்கொள்ள நம்பிக்கை மற்றும் சமத்துவத்தை கட்டமைத்தல் செயல் திட்டத்துடன் கூடிய அமைப்புகள் ஆகியவை மிகவும் இன்றியமையாதது. ஆனால், அனைத்து நாடுகளும் ஆபத்தான முறையில் எந்த வித தயார் நிலையும் இன்றி உள்ளன.

பருவ நிலை தொடர்பான பேரழிவுகள்

பருவ நிலை தொடர்பான பேரழிவுகள்

ஒரு ஆபத்து மட்டும் இல்லை. பல ஆபத்துக்களுக்கு நாடுகள் தயாராக இருக்க வேண்டும். பல்வேறு வகையான பேரழிவுகளையும் எதிர்கொள்ள திட்டமிடலுடன் இருந்தால் மட்டுமே சமூம் அதை எதிர்கொள்ள முடியும். ஏனென்றால் ஒரே நேரத்தில் இந்த பேரழிவுகள் நிகழக்கூடும். இந்த நூற்றாண்டில் பருவ நிலை தொடர்பான பேரழிவுகளும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் கொரோனா பெருந்தொற்று.

அடுத்த பெருந்தொற்று விரைவில் வரக்கூடும்

அடுத்த பெருந்தொற்று விரைவில் வரக்கூடும்


கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வரும் அதேவேளையில் தீவிரமாகவும் இருந்து வருகிறது. ஆனால் அதை எதிர்கொள்ளும் நமது திறன் குறைவாகவே உள்ளது. அடுத்த சுகாதார நெருக்கடிக்கு இப்போதே தயாராவதற்கான ஒரு ஒரு எச்சரிக்கை மணியாகா கொரோனா பெருந்தொற்று இருக்க வேண்டும். அடுத்த பெருந்தொற்று விரைவில் வரக்கூடும். கொரோனாவின் மூலம் நமக்கு கிடைத்த அனுபவங்கள் தயார் நிலையை விரைவுபடுத்தவில்லை என்றால் வேறு எது செய்யும்.

நம்பிக்கை பலவீனமாக இருந்தால்

நம்பிக்கை பலவீனமாக இருந்தால்

மக்கள் நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே தடுப்பூசிகளை போட்டுக்கொள்வாரக்ள். எனவே நம்பிக்கையை கட்டமைப்பதற்காக அடுத்தவரை முறை காத்திருக்க முடியாது. எனவே படிப்படியாக இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டமைக்க வேண்டும். நம்பிக்கை பலவீனமாக இருந்தால் பொது சுகாதாரம் அரசியல் மற்றும் தனிநபர்மயமாக்கப்படும். இதுதான் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையையும் பாதிப்பதாக அமைந்தது. அடுத்த சுகாதார நெருக்கடிக்கு முன்பாகவே சமுத்துவமற்ற சுகாதார மற்றும் சமூக பொருளாதார பாதிப்பு பிரச்சினைகளுக்கு உலகம் கண்டிப்பாக தீர்வு காண வேண்டும்" என்று IFRC தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

English summary
The Red Cross has warned that the world is ill-prepared for the next pandemic. It also warns that future health crises will collide with climate-related disasters, meaning that climate-related impacts and infections are more likely to co-exist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X