கஸ்தூரிக்கு ஜாமீன் கொடுங்க.. நானும் ஸ்பெஷல் அம்மா தான்! ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் மனைவி உருக்கம்
சென்னை: ‛‛நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் உருக்கமாக நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை கஸ்தூரியிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி எழும்பூர் போலீசார் சம்மன் வழங்க சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

இதையடுத்து சம்மனை வீட்டில் ஒட்டிய போலீசார், கஸ்தூரியை தேட தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னை எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர். ஹைதராபாத்தில் கஸ்தூரியை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
நீதிபதி ரகுபதி ராஜா முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வரும் 29ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நடிகை கஸ்தூரி நீதிபதியிடம் சொந்த ஜாமீனில் விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தார்.
முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க.. நான் சிங்கிள் மதர் என்று கூறி வாதம் வைத்து இருந்தார் கஸ்தூரி. இருப்பினும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. ஏற்கனவே நடிகை கஸ்தூரி சார்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே தான் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தின் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் கோரிக்கை வைத்துள்ளார்.
காமாட்சி சுவாமிநாதன் தற்போது சக்ஷம் (மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு) அமைப்பின் அகில இந்திய துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் காமாட்சிசுவாமிநாதன் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பதிவான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது.
அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும அவர் ரு தனி மனுஷியாய் அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்து கொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான் (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.
எனக்கும், என்னை போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ரு வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது. ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன்'' என்று தெரிவித்துள்ளா்ர.












Click it and Unblock the Notifications