குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் தினமும் குறையும் கொரோனா தொற்று.. சென்னையில் எத்தனை பேருக்கு பாதிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது.
உயிரிழப்பு தினமும் அதிகரித்து வந்த நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக குறையும் கொரோனா
ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 30,000-க்கு கீழே கொரோனா வந்துள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 32,79,284 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.

உயிரிழப்பும் சற்று குறைவு
இன்று உயிரிழப்பு குறைந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. செங்கல்பட்டில் 10 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூரில் 4 பேர் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,460 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 28,156 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 30,29,961 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்
2,11,863 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,35,991 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 6,02,97,961 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 5246 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 1662 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் எத்தனை?
கோவையில் 3448 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 530 பேருக்கும், மதுரையில் 582 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 970 பேருக்கும், திருவள்ளூரில் 665 பேருக்கும், திருச்சியில் 606 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1779 பேருக்கும், ஈரோட்டில் 1261 பேருக்கும், சேலத்தில் 1387 பேருக்கும், நாமக்கல்லில் 658 பேருக்கும், தஞ்சாவூரில் 695 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 126 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 779 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், நெல்லையில் 443 பேருக்கும், விருதுநகரில் 400 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications