என்னங்க இது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இப்படி வேகமாக உயருது.. சென்னையும் மிக மோசம்.. உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொரோனா ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது.

கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 27,49,534 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவையில் தலா ஒருவர் இறந்துள்ளனர், இதுவரை கொரோனாவுக்கு 36,784 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 611 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,04,410 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

சென்னையில் அதிவேகம்
8,340 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,03,403 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,66,08,042 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 682 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டிலும் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 75 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 168 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், மதுரையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 70 பேருக்கும், திருச்சியில் 21 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 44 பேருக்கும், ஈரோட்டில் 35 பேருக்கும், சேலத்தில் 30 பேருக்கும், நாமக்கல்லில் 17 பேருக்கும், தஞ்சாவூரில் 13 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications