மக்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா கேஸ்கள்.. சென்னையும் ஆறுதல்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

வேகமாக சரியும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 1,200-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். மொத்த பாதிப்பு 26,92,949 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை
கொரோனாவுக்கு மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். திருவண்ணாமலையில் 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாகுமாரியில் 2 பேரும், தஞ்சாவூரில் 2 பேரும் இறந்தனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவுக்கு பேர் 35,987 உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,392 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,43,431 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னைதான் டாப்
13,531 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,29,573 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,91,32,122 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 147 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 200-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 140 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா குறைந்து வருகிறது. செங்கல்பட்டில் 93 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 31 பேருக்கும், மதுரையில் 19 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 20 பேருக்கும், திருவள்ளூரில் 42 பேருக்கும், திருச்சியில் 46 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 67 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும், ஈரோட்டில் 83 பேருக்கும், சேலத்தில் 57 பேருக்கும், நாமக்கல்லில் 65 பேருக்கும், தஞ்சாவூரில் 51 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications