சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. இந்த 6 மாவட்டத்தில் மிக அதிகம்.. 3-வது அலை அறிகுறியா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனா அதிகரித்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தடை

கொரோனா அதிவேகம்

கொரோனா அதிவேகம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக கொரோனா அதிவேகமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும்.

உயிரிழப்பும் குறைவு

உயிரிழப்பும் குறைவு

கொரோனா மொத்த பாதிப்பு 26,40,361 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். செங்கல்பட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில்3 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் 2 பேரும் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,271 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,548 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,88,334 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.

சென்னை ஆறுதல்

சென்னை ஆறுதல்

16,756 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,53,205 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,39,30,427 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 202 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்று மீண்டும் அதிகரித்த நிலையில் இன்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது. கோவையில் கடந்த 2 நாட்களாக குறைந்த தொற்று இன்று சற்று அதிகரித்து முதலிடம் பிடித்துள்ளது.

செங்கல்பட்டு அதிகம்

செங்கல்பட்டு அதிகம்

கோவையில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 135 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 34 பேருக்கும், மதுரையில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 20 பேருக்கும், திருவள்ளூரில் 63 பேருக்கும், திருச்சியில் 52 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 110 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும், ஈரோட்டில் 134 பேருக்கும், சேலத்தில் 69 பேருக்கும், நாமக்கல்லில் 56 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் சதம்

6 மாவட்டங்களில் சதம்

சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக திருப்பூர், தஞ்சாவூரில் பாதிப்பு வேகமாக உயருகிறது. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை.

English summary
Corona infection has been confirmed in 1,693 people in Tamil Nadu today. Another 25 people were killed in the corona. The incidence of corona in Tamil Nadu has increased rapidly in the last 4 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X