அதிகரிக்கும் கொரோனா.. பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    சென்னை: தடுப்பூசி போடுங்க.. கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்: முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

    தலைநகர் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் 682 பேருக்கு பாதிப்பு என்று கொரோனா இரட்டிப்பாகி வருகிறது. செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று அதிகமாக உள்ளது.

     ஒரே ஆயுதம் தடுப்பூசி

    ஒரே ஆயுதம் தடுப்பூசி

    இது ஒருபக்கம் இருக்க ஓமிக்ரான் வைரசும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதனால்தான் தமிழகத்தில் கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய கடைகள், ஜிம்கள், தியேட்டர்களில் 50 சதவீத பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்துள்ளன. கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.

     சிறுவர்களுக்கு தடுப்பூசி

    சிறுவர்களுக்கு தடுப்பூசி

    ஏற்கனவே தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று தடுப்பூசி போடப்படுகின்றன.

    முதல்வர் அட்வைஸ்

    முதல்வர் அட்வைஸ்

    இந்த நிலையில் சிறுவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறி இருப்பதாவது:- பெற்றோர்களே! எவ்விதத் தயக்கமுமின்றி 15-18 வயதுக்குட்பட்ட உங்கள் பிள்ளைகளை #COVID19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள்!

    மக்கள் இயக்கம்

    மக்கள் இயக்கம்

    நீங்களும் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! மக்கள் இயக்கமான இதில் உங்களின் பங்களிப்புதான் கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+