தமிழகத்தில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு - 491 பேர் குணமடைந்தனர்
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவியோரின் மொத்த எண்ணிக்கை 8,42,730 ஆக உயர்ந்துள்ளது.

8,26,011 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 12,391 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 10,70,83,754பேரை பாதித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளது. 23 லட்சம் பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு 1,08,47,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,05,46,905 பேர் குணமடைந்துள்ளனர். தினசரியும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றி சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 469 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,42,730 ஆக அதிகரித்துள்ளது.
சசிகலா வேறு காருக்கு மாற தமிழ்நாடு காவல்துறை கெடுபிடி காரணமா? - டி.டி.வி. தினகரன் பதில்
கொரோனாவில் இருந்து 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 8,26,011 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று கொரோனாவிற்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 12,391 பேராக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு 4,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.