ஏழு மாவட்டம் தான்.. எல்லா ஊரிலும் குறைந்தது கொரோனா.. மாவட்ட நிலவரம் பாருங்கள்!
சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பும் சரி, நோயாளிகளின் எண்ணிக்கையும் சரி வெகுவாக சரிந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 34,198 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதைவிட குறைவாக 32,960 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 4,262 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அக்டோபர் 23 தேதி மாலை நிலவரப்படி எந்த மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகம், எந்த மாவட்டத்தில் நோயாளிகள், அங்கு இன்றைக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் நோயாளிகள்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10628
பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3758 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் 1870 பேரும், செங்கல்பட்டில் 1414 பேரும், திருவள்ளூரில் 1289 பேரும், திருப்பூரில் 1059 பேரும், ஈரோட்டில் 867
பேரும், கடலூரில் 782 பேரும், நாமக்கல்லி 800 பேரும் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிலவரம்
தமிழகத்தில் அக்டோபர் 23ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இன்று 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 280பேரும், செங்கல்பட்டில் 186 பேரும், சேலத்தில் 185 பேரும், திருவள்ளூரில் 168 பேரும், திருப்பூரில் 130 பேரும், ஈரோட்டில் 106 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் 78 பேர்
திருவண்ணாமலையில் 37 பேரும், வேலூரில் 53 பேரும், திருவாரூரில் 53 பேரும், திருச்சியில் 53 பேரும், திருநெல்வேலியில் 23 பேரும், விழுப்புரத்தில் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் 95 பேரும், தஞ்சாவூரில் 78 பேரும், புதுக்கோட்டையில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் 45 பேர்
கள்ளக்குறிச்சியில் 25 பேரும், காஞ்சிபுரத்தில் 87 பேரும், கன்னியாகுமரியில் 51 பேரும் ராணிப்பேட்டையில் 30 பேரும், தேனியில் 20 பேரும், நீலகிரியில் 45 பேரும், திருப்பத்தூரில் 45 பேரும் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 16 பேரும், அரியலூரில் 11 பேரும், தென்காசியில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 18 பேரும், மதுரையில் 71 பேரும், கரூரில் 26 பேரும், கிருஷ்ணகிரியில் 47 பேரும் , ராமநாதபுரத்தில் 6 பேரும், பெரம்பலூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications