திமுக கூட்டணியில் சிபிஐக்கு திருப்பூர் துணை மேயர், 1 நகராட்சி, 3 பேரூராட்சி தலைவர்கள் பதவி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சி.பி.ஐ) திருப்பூர் துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கூத்தாநல்லூர் நகராட்சி உட்பட 3 பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளும் சி.பி.ஐ.க்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் வார்டுகளுக்கு இத்தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் திமுக கூட்டணியே பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் வென்ற வார்டு கவுன்சிலர்கள் தமிழகம் முழுவதும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு இப்பதவிகளுக்கான ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூத்தாநல்லூர் நகராட்சித் தலைவர் பதவி, வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர் பேரூராட்சி பதவிகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் நகராட்சி துணைத் தலைவர் பதவிகள்; கூத்தைப்பார், ஊத்துக்குழி, மேல சொக்கநாதபுரம், கீரமங்கலம், சேத்தூர், ஜம்பை பேரூராட்சிகளில் துணைத் தலைவர் பதவிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications