காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வாரி வழங்கியாச்சு! எங்களுக்கு ஒரு நியாயம்? சீறிய CPI(M) சண்முகம்
சென்னை: திமுகவால் காங்கிரஸ், தேமுதிகவிற்கு அதிக தொகுதிகளை கொடுக்க முடியும் போது எங்களுக்கு மட்டும் முடியாது என சொல்வது நியாயம் அல்ல என சென்னை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் ஒருவழியாக உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுக்கும் திமுக-வுக்கும் இடையே தொகுதி எண்ணிக்கையில் சிறுசிறு மனக்கசப்புகள் உருவாகத் தொடங்கியுள்ளன.

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே ஏற்கனவே இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தன. இதில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், நாளை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், இன்றைய பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாயம் வேண்டாமா
தொகுதி பங்கீடு குறித்து குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினார். அவர் கூறுகையில், "இன்றைய பேச்சுவார்த்தை போராட்டத் தயாரிப்புப் பணிகளுக்காகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளில் (10-க்கும் மேற்பட்ட இடங்கள்) போட்டியிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதையே பேச்சுவார்த்தைக் குழுவிடமும் வலியுறுத்தியுள்ளோம்," என்றார்.
கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடு
திமுக தரப்பில், "புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், நீங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குவது கடினம்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பெ. சண்முகம், "கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வந்தாலும், இதே நெருக்கடிக்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேமுதிக-வுக்கும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும்போது, நீண்டகால நட்பு சக்திகளான இடதுசாரி கட்சிகளுக்கு இடமில்லை என்று சொல்வதில் நியாயமில்லை," எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மார்க்சிஸ்ட் நிலை
கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் விருப்பத்தை திமுகவின் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவரிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் இது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடதுசாரிகளின் இந்தத் திட்டவட்டமான முடிவு திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 கேட்டோம்
அது போல் இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில் திமுகவிடம் 6 தொகுதிகள் கேட்டுள்ளோம். 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு திமுக சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications