ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவித்த மோடி.. "பாசிசமாவது பாயாசமாவது" நடிகர் விஜய் பேசுவாரா? சிபிஎம் சுரீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல்- பொது சிவில் சட்டம் என முழங்கியிருக்கும் நிலையில் "பாசிசமாவது பாயாசமாவது" என பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இது பற்றி கருத்து தெரிவிப்பாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி போல ஒரே நாடு- ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தேசிய குடும்ப அட்டையையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதங்களின் சார்பில்லாத பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என பேசியிருந்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன.

one nation one election edappadi palaniswami tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் அருணன் தமது எக்ஸ் பக்கத்தில், எல்லாவற்றையும் ஒன்றாக்கியாச்சு, அடுத்து ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே நாடு-ஒரே சிவில் சட்டம்: மோடி முழங்கியிருக்கிறார்.
அதற்கடுத்து, ஒரே நாடு-ஒரே அரசு என்று மாநில அரசுகளை ஒழிப்பார்!
பாசிசமாவது பாயாசமாவது என்றவர் இது பற்றி பேசுவாரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமது கட்சி மாநில மாநாட்டில் பேசுகையில், பாசிசத்தை எதிர்க்கிறோம் என்கிறார். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா? என கேள்வி எழுப்பி இருந்தார். நடிகர் விஜய்யின் 'பாசிசம்.. பாயாசம்' பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் சிபிஎம் கட்சியின் பேராசிரியர் அருணன் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+