சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபர பல்லக்கு விவகாரம்! திசை திருப்பும் முனைப்பில் அதிமுக - பாஜக..! பகீர் புகார் கிளப்பும் முத்தரசன்

Google Oneindia Tamil News

சென்னை : தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்லும் பட்டின பிரவேச நிகழ்ச்சி குறித்து பிரச்சினை தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கம் கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமட ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.

நிகழ்ச்சியின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி அதனை பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதற்கு ஒரு சேர ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

English summary
Communist Party of India (CPI) Tamil Nadu state secretary Mutharasan has said that the practice of carrying human beings should be abandoned as the issue of Dharmapuram Aadeenam Pallaku has caused a stir across Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X