தமிழ்நாட்டுக்கு பதில் தமிழகமா? வரலாறு தெரியுமா? ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக தாக்கிய சிபிஐ(எம்)
சென்னை: தமிழ்நாட்டை, தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவியை தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஒற்றை இந்தியாவை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆளுநரான ‛ரம்மி ரவி' பாஜக தலைவராகவும், ஆர்எஸ்எஸ் தொண்டராகவும் பேசி வருவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு என பெயர் வந்த வரலாற்றை கூறி அவர் விரிவாக பாடமெடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி பேசினார். அப்போது தமிழ்நாடு பற்றி பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசியது பெரும் சர்ச்சைளை கிளப்பியது.

தமிழகம் என அழைக்க..
ஆளுநர் ஆர்என் ரவி,‛‛பிரதமர் மோடியின் சிந்தனையால் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. விடுதலை போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். பாரதம் என்பது ரிஷிகள், ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது.
நமது பாரத தேசத்தை பிளவுபடுத்த, அழிப்பதற்கு ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என பேசினார்.

ஆளுநருக்கு சிபிஐ (எம்) கட்சி எதிர்ப்பு
தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிமுகவும் ஆளுநரின் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு சிபிஐ (எம்) கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுபற்றி சிபிஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆர்எஸ்எஸ் திட்டம்
தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்குரியதாகும். காசி-தமிழ் சங்கமம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட குயுக்தியான ஆர்எஸ்எஸ் திட்டத்தின் இறுதியாக ஆளுநர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இதை பேசியுள்ளார். அதேபேச்சில் தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்த எரிச்சலையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்டு மொழிவழி தேசிய உரிமையை மறுதலித்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டம் எடுபடவில்லையே என்ற ஆத்திரமே அவர் பேச்சின் அடிநாதமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

‛ரம்மி ரவி’ என இழிபுகழ்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதை தான் ஆளுநர் செய்ய வேண்டும். ஆனால் அந்த வேலையை கூட தாமதப்படுத்தி 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் பாட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. புதிய கல்வி கொள்கையை திணிக்க முயல்கிறார். பல்கலைக்கழங்களில் மூக்கை நுழைக்கிறார். ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு எதிராக அவசர சட்டத்தை காலாவதி ஆக்கச் செய்து ‛ரம்மி ரவி' என்ற இழிபுகழை சம்பாதித்துள்ளார். இவைதான் இந்த ஆளுநர் சாதனைகள்.

பாஜக தலைவராக..
இதே ஆளுநர், கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் அரசியல் செய்ய முயற்சித்து கண்டிக்கப்பட்டார். தமிழ்நாட்டு அரசியலிலும் மூக்கை நுழைத்து, பாஜக தலைவராவே நடக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆர்எ்எஸ் விருப்பத்தை பேசி கண்டனங்களை பெறுகிறார். இந்திய விடுதலைக்கும் தமிழ்நாட்டின் உருவாக்கத்திற்கும் ஏராளாமன உயிர்தியாகங்களை செய்துள்ளது தமிழ்நாட்டு மண். ஆனால், அதிலெல்லாம் எந்த பங்கும் இல்லாத இயக்கம் ஆர்எஸ்எஸ் விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்ததுடன் மொழிவழி மாநிலம் என்ற ஏற்பாட்டையும், பல்வேறு கலாச்சாரங்களின் இருப்பையும் எதிர்த்து செயல்பட்ட இழிவான வரலாற்றிற்கும் சொந்தக்காரர்களே சங்கபாரிவாரத்தினர்.

கொல்லைப்புறம் வழியாக திணிக்க
இந்திய விடுதலைக்கு பிறகும், 1957 ம் ஆண்டு ஜன சங்கத்தின் தேர்தல் அறிக்கை, ‛கூட்டாச்சி முறையை ஒழித்து இந்தியாவை ஒரேநாடு என்று பிரகடனப்படுத்துவோம்' என்று அறிவித்தது வெள்ளிடைமலை. அதையே கொல்லைப்புறம் வழியாக திணிக்க இப்போது அப்பட்டமாக முயற்சிக்கிறார் ஆளுநர். சட்டமன்றம் மற்றும் அரசின் நிர்வாக மொழிகள் அனைத்தும் தாய்மொழியில் நடக்க வேண்டுமெனவும் மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டுமெனவும் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவாக முதலில் ஆந்திர மாநிலமும், தமிழ்நாடு அமைவதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டங்களும், நூற்றுக்கணக்கான உயிர்த் தியாகங்களை தொடர்ந்தே 1956 நவம்பர் 1ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும், 6 ஒன்றிய பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் வரலாறு
நாடாளுமன்றத்தில் 1961ம் ஆண்டு சென்னை மகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற மசோதாவை பி ராமமூர்த்தி கொண்டு வந்தார். அவர் சிறையில் இருந்த சூழலில், இந்த மசோதாவை முன்வைத்து வாதாடினார் மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் உறுப்பினர் பூபேஷ் குப்தா. அண்ணாவும் அதனை ஆதரித்தார். ஆனால் மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறு எழுச்சியுற்ற தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை உண்டாக்கினர். அண்ணாவின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. அதற்கு பிறகு முத்தாய்ப்பாக நம் மாநிலத்துக்கு ‛‛தமிழ்நாடு'' பெயர் சூட்டப்பட்டது. அந்த தீர்மானம் ஒன்றிய அரசின் ஒப்புதலை பெற்று அமலானது. இப்படிப்பட்ட வரலாற்றை தான் துச்சசென பேசியுள்ளார் ஆளுநர்.

ஆர்எஸ்எஸ் தொண்டராக..
அனைத்து மொழிகளுக்கும் சமமான முன்னுரிமை, தாய்மொழிகளுக்கு ஊக்கம், தாய்மொழியில் நிர்வாகம், அனைத்து மக்களுக்கும் அதிகாரம் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாகும். ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்எஸ்எஸ் தொண்டராகவும் ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுவது வன்மையான கண்னத்திற்குரியது. இந்த போக்கை தமிழ்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்'' என காட்டமாக கூறியுள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications