கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. சிபிஎம்
சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்டாலினுக்கு நன்றி
இவ்வெற்றியை உறுதி செய்திட அனைத்து மதச்சார்பற்ற எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தல் களம் கண்ட திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அனைத்து தோழமைக் கட்சியின் தலைவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிகார பலம்
இத்தேர்தலில் மத்திய, மாநில ஆளும் அதிமுக - பாஜக கூட்டணியின் பண பலம், அதிகார பலம், தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பெரும்பகுதியான நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத் தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட்டது தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

வாக்காளர்களுக்கு நன்றி
இத்தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும், இவர்களது வெற்றிக்கு கண்துஞ்சாது அரும்பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் தேர்தல் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாஜகவுக்கு மக்கள் வாக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய, மாநில தலைவர்களின் தேர்தல் பரப்புரை செய்திகளை மக்களுக்கு வெளியிட்டு உதவிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றி பெறும் வகையில் இந்திய நாட்டு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

தமிழகம் போல வட இந்தியா இல்லை
தமிழகத்தைப் போல் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்தித்தது போல, இதர மாநிலங்களிலும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளுக்கு இடையே பரஸ்பர போட்டியினை தவிர்த்து ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தால் தமிழகத்தைப் போலவே நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும் நிலைமை உருவாகியிருக்கக் கூடும் என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம்.

முடிவை ஏற்போம்
இருப்பினும் மக்களின் தீர்ப்பாக அமைந்துள்ள தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், தொடர்ந்து எதிர்காலத்தில் மதவெறி சக்திகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளை பேணி காக்கவும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications