கிரெடிட் கார்டு வாங்கியும் இன்னொரு கடன் வசதி? 69% இளைஞர்கள் செய்தது என்ன? சிபில் ஆய்வில் புது தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பணப் பரிவர்த்தனை முறைகள் மாறிவரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பெருநகரங்களில் உள்ளவர்களை தாண்டி சிறிய ஊர்கள் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள இளம் தலைமுறையினரின் கைகளுக்கு கிரெடிட் கார்டுகள் வேகமாக சென்று சேர்ந்துள்ளன. டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்டுள்ள "பியாண்ட் தி ஸ்வைப் 2026" ஆய்வறிக்கை இந்த உண்மையை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

TransUnion CIBIL மீண்டும் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.. டிரான்ஸ்யூனியன் சிபில் என்பது இந்தியாவில் தனிநபர்கள், நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அவற்றைத் திருப்பிச் செலுத்தும் விவரங்களைச் சேகரித்து, கடன் வரலாற்றை மதிப்பிடும் நிறுவனமாகும்.

Credit Card Users

ஒருவர் வங்கியில் தனிநபர் கடன் வாங்கினாரா? கிரெடிட் கார்டில் எவ்வளவு கடன் நிலுவை வைத்திருக்கிறார்? வாங்கிய கடனைச் சரியாகத் திருப்பிக் கட்டுகிறாரா? அவருடைய கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு? என்பன போன்ற விவரங்களை இந்த நிறுவனம் ஆய்வு செய்கிறது.

கிரெடிட் கார்டு பயன்பாடு

அந்தவகையில் சமீபத்தில், டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி, புதிதாக கிரெடிட் கார்டு பெறுவோரில் 50 சதவீதம் பேர் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர்.

2022-ல் புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியவர்களில் 30 வயதுக்குட்பட்டவர்கள் 43 சதவீதமாக இருந்தது.. ஆனால் இப்போது 2026-ல் இது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த புதிய கஸ்டமர்களில் 46 சதவீதம் பேர் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.

எகிறிய இளைஞர்கள் எண்ணிக்கை

கடந்த 10 வருடத்துக்கு முன்பு, அதாவது 2016-ம் ஆண்டில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 1.4 கோடியிலிருந்து 5.2 கோடியாக உயர்ந்துள்ளது.. இதே காலத்தில் கிரெடிட் கார்டு மூலமான நிலுவைக் கடன் தொகையும் 40 ஆயிரம் கோடியிலிருந்து 3.1 லட்சம் கோடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கார்டு வைத்திருப்பவரின் சராசரி கடனும் 31 ஆயிரத்திலிருந்து 65 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது.

கிரெடிட் கார்டு வாங்குவதற்கு முன்பேயே, நிறைய இளைஞர்கள் வேறு கடன்களையும் வாங்கியிருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, 2024-ம் ஆண்டில் முதல்முறையாக கார்டு பெற்ற இளைஞர்களில் 31 சதவீதம் பேர் ஏற்கனவே குறைந்தது 2 கடன் கணக்குகளை வைத்திருந்தனர்.

தனிநபர் கடன், இன்னொரு வசதி

குறிப்பாக, 18 சதவீதம் பேர் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான கடன்களையும், 23 சதவீதம் பேர் சிறிய தனிநபர் கடன்களையும் ஏற்கனவே பெற்றிருந்தனர். இதன் மூலம், கிரெடிட் கார்டு என்பது அவர்களுக்கு முதல் கடனாக இல்லாமல், ஏற்கனவே உள்ள கடன்களுடன் கூடுதலாக வந்து சேரும் இன்னொரு வசதியாக மாறியிருக்கிறது.

புதிய கிரெடிட் கார்டை பெற்ற முதல் 3 மாதங்களுக்குள்ளேயே, இளம் தலைமுறையினரில் 28 சதவீதம் பேர் 25,000 ரூபாய்க்கும் அதிகமான கடன் நிலுவையை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், கார்டு வாங்கிய ஒரு ஆண்டிற்குள், 69 சதவீத இளைஞர்கள் அடுத்தடுத்து வேறு புதிய கடன்களையும் வாங்கியுள்ளனர். இதில் பலரும் தங்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்கிய அதே நிறுவனத்திடமிருந்தே மேலும் கடன் வாங்குவதாகவும் இந்த ஆய்வின்படி தெரியவருகிறது.

முதல் முறை கிரெடிட் கார்டு

2018-ம் வருடத்தில் இதே வயதிலிருந்த இளைஞர்களில் 56 சதவீதம் பேருக்கு முன்பு கடன் வாங்கிய அனுபவம் இல்லை. ஆனால், 2024-ம் வருடத்தில் முதல் முறையாக கிரெடிட் கார்டு வாங்கிய 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏற்கனவே கடன் வாங்கிய அனுபவம் இல்லை.

கிரெடிட் கார்டு பயன்பாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவில் கடன் வசதி பெறுவோரில் 25% பேர் மட்டுமே இதைப் பயன்படுத்துகின்றனர். இங்கிலாந்தில் இது 70 சதவீதமாகவும், கொலம்பியாவில் 62 சதவீதமாகவும், ஹாங்காங்கில் 98 சதவீதமாகவும் இருப்பதாக இந்த ஆய்வு ஒப்பிட்டுக் காட்டுகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+