Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹால்ல + அப்பறம் கிச்சனில் நுழைந்து டெலிவரி ஊழியர் "அக்கிரமம்".. போலீசுக்கு ஓடிய பெண்.. வாவ் ஆக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மளிகை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வந்து தந்த, டெலிவரி ஊழியர் ஒருவரை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. மளிகை பொருட்களை, டெலிவரி செய்ய போன இடத்தில் சேட்டையை காட்டியிருக்கிறார்..!!!

பல முன்னணி நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் காலம் நேரம் பாராமல் வேலை செய்கிறர்கள்.. கடும் வெயில், மழையை பாராமல் உழைக்கிறார்கள்... இதைவிட பெரிய சிக்கல் டிராஃபிக் ஜாம்.

Crime chennai and young girl complaint on twitter that she was sexually harassed by an delivery employee

இந்த டிராபிக்கில் இவர்கள் சிக்கி படாதபாடுபட்டுதான் உணவை கொண்டு போய் உரியவர்களிடம் சேர்ப்பது என்பது மிகப்பெரிய கடமையாகும்..

ஆனால் வீட்டில் இருந்து கொண்டு ஆர்டரை பெறும் வாடிக்கையாளர்கள் சிலர், இதையே பிரச்சனையாக்கி விடுவதும் உண்டு.. ஏதாவது ஒரு காரணங்களுக்காக அவர்களை திட்டுவதும், காயப்படுத்துவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.. சில நாட்களுக்கு பிரபல சோமேட்டா ஊழியர் ஒருவரை பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து, செருப்பால் அடிக்கும் வீடியோவும் இணையத்தில் பரவியது.. இதை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள், அந்த ஊழியருக்குதான் தங்கள் ஆதரவை வழங்கினர்.

கன்னத்தில் முத்தம்: அதேபோல, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது சில சமயங்களில் புகார்கள் வந்துவிடுகின்றன.. இப்படித்தான், சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த பெண்ணுக்கு 19 வயதிருக்கும்.. சோமாட்டோ மூலம் சாப்பாடு ஆர்டர் தந்துள்ளார்.. இரவு 9.30 மணியளவில், சோமாட்டோ டெலிவரி ஊழியர் உணவு டெலிவரி செய்ய சென்றிருக்கிறார்.. இந்த ஊழியருக்கு 40 வயதாகிறது... அந்த பெண்ணும் உணவை பெற்றுக்கொண்டு, தேங்க்ஸ் என்று சொல்லி உள்ளார்.. ஆனால், அந்த ஊழியரோ, டக்கென அந்த பெண்ணின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக 2 முறை முத்தமிட்டுவிட்டார். "நான் உனக்கு மாமா மாதிரி.. உனக்கு ஏதாவது வேண்டுமானால் என்னிடம் கேட்க வேண்டும்" என்று சொன்னதுமே, அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.

பிக்பேஸ்கட்: இப்போது நம் சென்னையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. டெலிவரி ஊழியரால் பாதிக்கப்பட்ட அந்த பெண், நேராக போலீசுக்கே போய்விட்டார்.. சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த அவர், காவல்துறையினாின் சமூக வலைதள பக்கத்தில் அந்த புகாரை பதிவு செய்துள்ளார்.. அதில், கடந்த 3-ம் தேதி தன்னுடைய நண்பர் "பிக்பேஸ்கட் வலைதளம்" மூலம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்தேன். கடந்த 5-ம் தேதி டெலிவரி ஊழியர் ஒருவர் பொருட்களை என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்தபோது நான் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அதனால், டெலிவரி ஊழியரிடம் பொருட்களை ஹாலில் வைத்துவிட்டு செல்லுமாறு சொன்னேன்.

கிச்சனுக்கு ஓடினேன்: அப்போது நான் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த கொண்ட ஊழியர் அத்துமீறி உள்ளே நுழைந்ததுடன், என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். உடனே பயத்தில் நான் கிச்சனுக்குள் ஓடி ஒளிந்து கொண்டேன்.. அந்த ஊழியரை வெளியே போகுமாறும் சொன்னேன். ஆனால், அவர் என்ன சொல்லியும் கேட்காமல், வீட்டு கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, என்னிடம் அத்துமீறி சில விரும்பத்தகாத செயலி்ல் ஈடுபட முயன்றார். பிறகு, அந்த ஊழியர் என்னுடைய செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு கொடுத்ததால், போலீஸில் புகார் அளிக்கப்போவதாக சொன்னேன். ஆனால் அதையும் அவர் பொருட்படுத்தவில்லை..

எகிறி எஸ்கேப்: அதனால், நான் கத்தி கூச்சலிட்டேன்.. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததுமே அந்த ஊழியர் தப்பிச்சென்றுவிட்டார்.. அதனால், சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்டு, நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். இதைக்கேட்ட நிறுவனமும், அந்த டெலிவரி ஊழியரை பணி நீக்கம் செய்வதாக கூறினார்கள். ஆனால், போலீசில் புகார் தர வேண்டும் என்பதால், அந்த ஊழியர் பெயர் மற்றும் செல்போன் நம்பரை கேட்டபோது, ஊழியர் பெயரை மட்டுமே சொல்லிவிட்டு சரியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்கள். போலீசில் இதை பற்றி புகார் அளிக்க வேண்டாமென்றும், இனிமேல் இப்படி நடக்காது என்றும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, நடந்த சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரத்துடன் துரைப்பாக்கம் மகளிர் போலீசிலும் இளம்பெண் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, துரைப்பாக்கம் ஒக்கியம் பகுதியை சேர்ந்த டெலிவரி ஊழியர் ஜெயபால் என்பவரை கைது செய்துள்ளனர்.. ஜெயபாலுக்கு 32 வயதாகிறது.. அவரிடடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இதனிடையே, இளம்பெண் அளித்த பாலியல் தொந்தரவு புகார் தொடர்பாக சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தில், 'இந்தப் புகார் தொடர்பாக உடனடியாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து 6 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம், எனவே தாங்கள் பயப்பட வேண்டாம் என்று பதிவிட்டு, நம்பிக்கையை தந்துள்ளனர்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+