தாலி வாசம்கூட போகலையே.. லாட்ஜ் ரூமுக்குள் நுழைந்த புது மாப்பிள்ளை.. சத்தமே காணோமாம்.. அட கொடுமையே
புதுமாப்பிள்ளை மர்மமாக உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்
சென்னை: ரிசப்ஷனுக்கு கல்யாண வீடே தயாராகி கொண்டிருந்த நேரத்தில்தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து அனைவரையும் நிலைகுலைய வைத்து விட்டது.
தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார்.. 30 வயதாகிறது.. இவர் கோமதி என்ற பெண்ணை காதலித்தார்.. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இந்த கோமதி..
பெரம்பலூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.. கோமதிக்கும் 30 வயதாகிறது..

லவ் ஜோடி
சுரேஷ்குமார் பி.இ. முடித்துவிட்டு, சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்தார்.. கோமதி கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.. படிக்கும்போது ஏற்பட்ட காதல் இத்தனை வருட காலமாகவே தொடர்ந்து வந்துள்ளது.. ஒருகட்டத்தில் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது... இரு குடும்பத்தினரும் பேசி, திருமணத்துக்கு சம்மதம் சொன்னார்.. நவம்பர் 10ம் தேதி அதாவது நேற்றையதினம் இவர்களுக்கு திருமணம் நிச்சயமானது..

ரிசப்ஷன்
புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் இவர்களின் திருமணம் நடந்தது... உறவினர்களும், நண்பர்களும் கூடிவந்து மணமக்களை வாழ்த்தினர்.. நேற்று மாலை, கோட்டக்குப்பம் தனியார் மண்டபத்தில் இவர்களுக்கு ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. திருமணம் முடிந்து அனைவரும் விருந்து சாப்பிட்டுள்ளனர். பிறகு சிறிது நேரத்திலேயே ரிசப்ஷன் நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.. மாப்பிள்ளை சுரேஷ்குமார் ரிசப்ஷனுக்கு ரெடியானார்.

புதுசா டிரஸ்
இவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சுரேஷ்குமார் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டனர்.. சுரேஷ்குமாரும் டிரஸ் மாற்றி கொண்டு வருவதாக சொல்லிவிட்டு ரூமுக்குள் நுழைந்தார்.. ஆனால், ரொம்ப நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், ரூமுக்குள் எட்டிப்பாரத்தனர்.. அப்போது சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷ் குமாரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தாலி வாசம்
ஆனால் வழியிலே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்... தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் குமார் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுத்தாலி
சுரேஷ்குமாரின் சடலத்தை கண்டு பெற்றோர்கள் கதறி கதறி அழுதார்கள்.. புதுத்தாலியின் வாசம்கூட மறையாமல், புதுமணப்பெண் கோமதி நிலைகுலைந்து போய்விட்டார்.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், சுரேஷ்குமார் மரணத்துக்கு காரணம் தெரியவரும். காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அன்றைக்கு சாயங்காலமே புது மாப்பிள்ளை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications