நகர கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் இனிமேல் கிடையாதா? விவசாயிகளுக்கான தமிழக அரசு திட்டம் என்ன?
சென்னை: நகரமயமாக்கல் நடவடிக்கை காரணமாக, நகைக்கடன், சிறு வணிகக்கடன் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இதற்காக நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வழங்குவது நிறுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அதிமுக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.. என்ன நடந்தது?
தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிஷான் கிரடிட் கார்டு (KCC) மூலம் 7 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு பயிர் கடன்
இது தவிர, நகைக்கடன், விசைத்தறி கடன், கால்நடைக் கடன் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதை ஓராண்டு காலத்துக்குள் செலுத்திவிட்டால் வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கங்களும் பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல வகை கடன்களை தாராளமாக வழங்கி வருகின்றன..
தமிழகம் முழுவதிலும், 119 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 56 சங்கங்கள் தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு, பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடனை உள்ளடக்கிய வேளாண் கடன்களை வழங்கி வருகின்றன.
வேளாண் பயிர்க் கடன்
இதில், நகர கூட்டுறவு வங்கிகளை பொறுத்தவரை, நகைக்கடன், சிறு வணிகக்கடன், வீட்டு அடமான கடன், வீடு கட்ட மற்றும் மனை வாங்க கடன்கள் வழங்கப்படுகின்றன... சில நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த அளவிலும் வேளாண் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், நகரமயமாக்கலால் வீட்டு கடன், சிறு வணிகக் கடன்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதாவது, நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், கடந்த 2024 - 25ல் அனைத்து பிரிவுகளிலும், ரூ.2,985 கோடி கடன்கள் வழங்கப்பட்டதில், வேளாண் கடனின் பங்கு, 75 கோடி ரூபாய் மட்டுமே என்கிறார்கள்..
எனவேதான், அந்த சங்கங்களில் வழங்கப்படும் வேளாண் கடன்கள், அருகிலுள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நகர கூட்டுறவு கடன் சங்கம்
அதாவது நகர கூட்டுறவு கடன் சங்கங்களால் வழங்கப்படும் வேளாண் கடன்களின் பயனாளிகளை கண்டறிந்து, அந்த கடன்களை, நகர கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மாற்றம் செய்ய, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சங்க உறுப்பினர்களுக்கு இந்த மாற்றம் குறித்த விவரத்தை தெரிவிப்பதுடன், உரிய முறையில் தடையில்லா சான்றிதழ் வழங்கும் பணிகளை மேற்கொள்ள, மண்டல இணை பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நகர்ப்புற தேவைகள் அதிகரித்து வருவதால், அவைகளை பூர்த்தி செய்வதில் கூட்டுறவு துறை அக்கறை காட்டி வரும் நிலையில், இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
முதுகெலும்பை முறிக்கிறதா?
ஆனால், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வழங்குவது நிறுத்தப்பட உள்ளதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து வருகிறது. .
"விவசாயக் கடன் வெறும் ரூ.75 கோடி என்பதற்கே துடித்த அரசு, ஆயிரக்கணக்கான கோடிகள் ஊழலில் வீணாகின்றன என்பதை மறைக்க முடியாது. வீடு, நகை, வணிக கடன் வழங்க வங்கிகள் ஏராளம்.. ஆனால் விவசாயிக்கு மட்டும் கதவுகள் மூடப்படுகிறது. இது நீதியா?
56 நகர கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்தின் பங்கு அழிக்கப்பட்டது.. இதுவே திமுகவின் உண்மையான விவசாயக் கொள்கை.. "விவசாயிகள் எங்கள் முதுகெலும்பு" என்று சொல்லும் திமுக, அந்த முதுகெலும்பை முறிக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications