சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 போட்டிகளில் கலக்கிய தமிழரை.. பிளான் போட்டு சாய்த்த தாக்கூர்.. குழப்பிய தோனி- எப்படி நடந்தது?

Google Oneindia Tamil News

சென்னை: கொல்கத்தாவின் அதிரடி தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயரை இன்று சிஎஸ்கே பவுலர் தாக்கூர் திட்டமிட்டு வீழ்த்தி விக்கெட் எடுத்தார்.

கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை சிஎஸ்கே எளிதாக வீழ்த்திய நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் பவுலிங் செய்ய தொடங்கி சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பவுலிங் செய்து வந்தது.

 வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

தொடர்ந்து இரண்டு போட்டிகளாக சிறப்பாக ஆடிய கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஐயர் இன்றும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பைக்கு எதிராக வெறும் 30 பந்தில் 53 ரன்கள், பெங்களூருக்கு எதிராக 27 பந்தில் 41 ரன்கள் என்று இவர் அறிமுக போட்டிகளிலேயே சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்தார். கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங்தான் இவ்வளவு நாள் பிரச்சனையாக இருந்தது.

கங்குலி

கங்குலி

இதை வெங்கடேஷ் தற்போது சரி செய்துள்ளார். கங்குலி ஸ்டைலில் ஆடும் இவர் இந்த ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். இவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். ஆனாலும் பூர்வீகப்படி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்று சென்னைக்கு எதிராக இவர் எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது.

சிஎஸ்கே கேகேஆர்

சிஎஸ்கே கேகேஆர்

ஆனால் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக வெங்கடேஷ் சரியாக ஆடவில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் வெங்கடேஷ் சிறப்பாக ஆட முக்கியமான காரணம், பந்தின் சீம். அதாவது நல்ல வேகத்தில் வந்த பந்துகளை சிறப்பாக இவர் எதிர்கொண்டார். பெரிதால் ஸ்லோ பால்களை அடிக்காமல் தவிர்த்தார். கொல்கத்தாவின் இன்னொரு டாப் ஆர்டர் வீரர் கிலலும் இதே போல்தான் ஸ்லோ பந்துகளில் சரியாக ஆடவில்லை.

கொல்கத்தா

கொல்கத்தா

இந்த நிலையில்தான் இன்று சாகர், ஷரத்துல், சாம் கரண் மூன்று பேருமே தொடக்கத்தில் இருந்து அதிக அளவில் ஸ்லோ பந்துகளை வீசினார்கள். தோனி பிளான் போட்டு கொடுத்தது போல பலரும் அவுட்சைட் ஆப் பகுதியில் அதிகமாக ஸ்லோ பந்துகளை வீசினார்கள். இதை வெங்கடேஷ் எதிர்கொள்ள முடியாமல் கொஞ்சம் திணறினார். இதில் சரியான ஷாட் அடிக்க முடியாமல் ஏற்கனவே டு பிளஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக பார்த்தார். ஆனால் அதில் டு பிளஸிஸ் கேட்ச் பிடிக்க முடியவில்லை.

ஷரத்துல் தாக்கூர்

ஷரத்துல் தாக்கூர்

அதன்பின் ஷரத்துல் தாக்கூர் சரியாக திட்டமிட்டு கிராஸ் சீம் போட்டார். பொதுவாக கிராஸ் சீன் ஸ்லோ பால் எப்படி வரும் என்று கணிக்க முடியாது. அதிலும் ஷார்ட்டாக் வரும் கிராஸ் சீன் பந்துகள் சட்டென எட்ஜ் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. இன்றும் வெங்கடேஷுக்கு அதே கிராஸ் சீன் அவுட் சைட் ஆப் பந்தைதான் தாக்கூர் வீசினார். இதைத்தான் கணிக்க முடியாமல் வெங்கடேஷ் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சந்தேகம்

சந்தேகம்

முதலில் அவருக்கே நாம் அவுட்டா என்ற சந்தேகம் இருந்தது. இதனால் ரிவ்யூ எடுக்கும் நிலைக்கு சென்றார். ஆனால் ரிவ்யூவில் அவர் பேட்டில் பந்து உரசி சென்றது உறுதியானது. இதனால் இரண்டு போட்டிகளில் நன்றாக ஆடிய வெங்கடேஷ் வெறும் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

English summary
CSK vs KKR: How Shardul Thakur took the wicket of Venkatesh Iyer today?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X