சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிராபிக் விதிகளை மீறுவோரை கண்காணிக்கும் "பிக்பாஸ்".. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர்களின் வீட்டுக்கே அபராத தொகைக்கான ரசீதை காவல் துறையினர் அனுப்பி வைக்கின்றனர்.

போக்குவரத்து விதிமீறல்களில் காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை பின்பற்றாதோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது.

செயல்பாடுகள்

செயல்பாடுகள்

மேலும் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து போலீஸாரும் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டனர்.

விதிமுறை

விதிமுறை

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மடக்கி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். வாகனத்தில் பின் சீட்டில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை மீறுவோரையும் போலீஸார் விட்டு வைப்பதில்லை.

நவீன கேமிரா

நவீன கேமிரா

இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வீட்டுக்கே அபராத தொகை ரசீதை காவல் துறையினர் அனுப்பி வருகின்றனர். விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுக்கும் வகையில் அண்ணா நகரில் நவீன கேமிரா நிறுவப்பட்டுள்ளது.

தப்பிவிடலாம்னு நினைக்காதீங்க

தப்பிவிடலாம்னு நினைக்காதீங்க

பதிவான வாகன எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அபராத ரசீதை போலீஸார் அனுப்பி வைக்கின்றனர். இதனால் இனி போக்குவரத்து விதிகளை மீறிவிட்டு தப்பிவிட்டோம் என நினைக்காதீங்க மக்களே!.

English summary
CTP is sending fine receipt directly to the trepasser's home as the traffic police is installing camera near Anna Nagar it can take image of number plate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X