Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் "ஒற்றை கை" கோவிந்தசாமி நினைவிருக்கா? ஜெயிலில் டிஜிபி கிட்ட பீடி கேட்டாரே? இப்ப பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சௌமியா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளி கோவிந்தசாமி, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கண்ணூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து தப்பித்துவிட்டார்.. இன்று விடிகாலை 1.15 மணிக்கு சிறைச்சாலையின் உயர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து தப்பிய சம்பவம் கேரளாவையே பரபரக்க வைத்துவிட்டது.. கோவிந்தசாமி ஜெயிலிலிருந்து தப்பிய அடுத்த நொடியே, அவரை தேடும் வேட்டையில் கேரளா போலீஸ் இறங்கிவிட்டது. என்ன நடந்தது கேரளாவில்? யாரிந்த கோவிந்தசாமி?

கடந்த 2011 -ல் நடந்த சம்பவம் இதுவாகும்.. கேரள எர்ணாகுளம் அருகே உள்ள சொரனூர் மஞ்சகாட்டு பகுதியை சேர்ந்தவர் சவுமியா.. 2௦11-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி, இரவு பணி முடிந்து திருச்சூர்-எர்ணாகுளம் ரெயிலில் வீட்டுக்கு திரும்பினார்..

Virudhachalam Govindasamy Sowmya

பெண்கள் பெட்டியில் சவுமியா

இதற்காக, பெண்கள் பெட்டியில் சவுமியா ஏறினார்.. இரவு நேரம் என்பதால், அப்போது பெட்டியில் யாருமில்லை.. தனியாக இருந்த, சவுமியாயை அங்கு அத்துமீறி நுழைந்தார் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி.. இவருக்கு 30 வயதாகிறது. சவுமியாவை திடீரென பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் சுதாரித்து கொண்ட சவுமியா, கோவிந்தசாமியை எதிர்கொண்டு போராடினார்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, சவுமியாவை ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.. அத்துடன், தானும் கீழே குதித்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சவுமியாவை பலாத்காரம் செய்துவிட்டு, அதற்கு பிறகே அங்கிருந்து தப்பி ஓடினார் கோவிந்தசாமி.

கோவிந்தசாமி கைது

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சவுமியா அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 6ம் தேதியே சவுமியா பரிதாபமாக இறந்துவிட்டார்.., இதையடுத்து சொரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, கோவிந்தசாமியை கைது செய்தனர்..

இந்த வழக்கு விசாரணை திருச்சூர் அதிவிரைவு கோர்ட்டில் 4 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றது. கடைசியில் கோவிந்தசாமி குற்றவாளி என்று நிரூபணமானது.. கோர்ட் அவருக்கு மரண தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.

பரபரப்பை கிளப்பிய வழக்கு

ஆனால், இந்த மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு போனார் கோவிந்தசாமி.. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சவுமியாவை கொலை செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.. சவுமியா ரெயிலில் இருந்து குதித்தாரா? இல்லை தள்ளி விடப்பட்டாரா? என சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி, மரண தண்டனையை ரத்து செய்துவிட்டது.. ஆனால், கோவிந்தசாமி சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு அதிகபட்சமாக 7 வருடங்கள் மரண தண்டனை வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பு கேரளா அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.. அதிலும் தமிழ்நாட்டிலும் இந்த வழக்கின் தீர்ப்பு எதிரொலித்தது..

கோரிக்கை வைத்த கோவிந்தசாமி

விருத்தாச்சலத்தை சேர்ந்த கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். சார்லி தாமஸ் என்று இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு..

தீர்ப்புக்கு பிறகு கேரளா சிறையில் அடைபட்டு கிடந்தாலும், ஏதாவது ஒரு கோரிக்கையை ஜெயிலில் விடுத்துக் கொண்டேயிருப்பாராம்.. இப்படித்தான் ஒருமுறை அப்போதைய கேரள போலீஸ் டிஜிபி. அனில்காந்த் கண்ணூர் ஜெயிலில் ஆய்வு செய்ய போனார்.. அப்போது கோவிந்தசாமி அடைக்கப்பட்டுள்ள பிளாக்குக்கும் சென்று ஆய்வு செய்தார்..

அப்போது டிஜிபியிடம் கோவிந்தசாமி தனக்கு ஜெயிலில் தினமும் 5 கட்டு பீடி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாராம்.. ஆனால் சிறை விதிகளின்படி ஜெயிலில் கைதிகள் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பீடி வழங்க முடியாது என்று டிஜிபி சொல்லிவிட்டார்..

கை ஊனம் - வேண்டுகோள்

அதேபோல, ஒரு கை ஊனம் என்பதால், தனக்கு செயற்கை கரம் பொருத்த ஏற்பாடு செய்யும்படியும் மறுபடியும் டிஜிபியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் கோவிந்தசாமி.. செயற்கை கரம் பொருத்துவது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபியும் கூறியிருந்தார்..

இன்னொருமுறை, டிஜிபி ரவுண்ட்ஸ் வரும்போது தனக்கு ஜெயிலில் தினமும் பிரியாணி வேண்டும் என்று கேட்டு, போராட்டமும் நடத்தியவர்தான் இந்த கோவிந்தசாமி.. இப்படி கைதி கோவிந்தசாமி ஏதாவது ஒரு கோரிக்கையை விடுத்து பரபரப்பை கிளப்பி கொண்டிருந்தார்..

தனி அறையில் கோவிந்தசாமி

இந்நிலையில்தான் இன்று காலை திடீரென கோவிந்தசாமி ஜெயிலிலிருந்து தப்பித்துவிட்டார். அதிகாலையில் 1.15 மணிக்கு சிறையின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி தப்பியிருக்கிறார்.. உயர் பாதுகாப்பு கொண்ட தனி அறையில் தான் கோவிந்தசாமி அடைக்கப்பட்டிருந்தாராம்.. சிறையை சுற்றிலும் மின்சார மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.. ஆனாலும், தப்பியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பிச் சென்றதால், கேரளா முழுவதும் பெரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது.

பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் என அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.. விசாரணையின் ஒரு பகுதியாக சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விடிகாலையில் அவர் தப்பிவிட்டாலும், பொழுதுவிடிந்த பிறகுதான், அவர் தப்பிய சமாச்சாரமே அனைவருக்கும் தெரியவந்துள்ளது..

எப்படி தப்பினார்

சிறைச்சாலை சுவரில் ஏறி குதிக்க, ஒரு கம்பளி போர்வை உட்பட 2 போர்வையை மட்டுமே பயன்படுத்தியதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. இதற்காக சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளையும் முன்னதாகவே வெட்டி எடுத்துள்ளார் கோவிந்தசாமி..

இதனால், கோவிந்தசாமியின் சமீபத்திய போட்டோவை போலீசார் வெளியிட்டு, அவரை தேட துவங்கிவிட்டனர்.

பிடிபட்ட கோவிந்தசாமி

ஆனால், தப்பிய சில மணி நேரங்களிலேயே கோவிந்தசாமி பதுங்கியிருக்கும் இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில்இடம் தொடர்பான ரகசிய தகவலின் பேரில் தப்பியோடிய கோவிந்தசாமியை கண்ணூர் போலீசார் கைது செய்துவிட்டனர்..

கோவிந்தசாமி தனது உயர் பாதுகாப்பு அறையின் இரும்புக் கம்பிகளை வெட்டி, துணிகளைச் சேர்த்து கயிறாக்கி சிறை சுவரில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின்படி, அவருக்கு வெளியிலிருந்து உதவி கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அதுகுறித்த விசாரணையும் ஆரம்பமாகியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+