எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது?
சென்னை: கடந்த சில நாட்களாக ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், அப்படியே தவெகவில் சேர்ந்தபடி இருக்கிறார்கள். எடப்பாடி நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், ''தகுதி நீக்கம் செய்வது தான் சரியாக இருக்கும் ; உங்களுக்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அவர்கள் உதவினார்கள் என்பதற்காக, சட்டச்சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
நீதிமன்றத்துக்கு எடப்பாடி தரப்பு செல்லுமேயானால் இந்த சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது வரும். ஆட்சி அமைத்த 15, 20 நாளிலேயே உங்கள் ஆட்சிக்கு எதிராக அதாவது சபாநாயகருக்கு எதிராக கட்சித்தாவல் வழக்கு கோர்ட் படி ஏறினால் மக்களிடம் உங்கள் இமேஜ் சரிய வாய்ப்பு உண்டு '' என்று சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர்கள் முதல்வர் விஜய்க்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். அதனடிப்படையில், ''கட்சித்தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள்'' என்று சபாநாயகருக்கு ஜோசப் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

இதனை அறிந்ததால் தான், ஆதவ்வின் ஆலோசனையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததோடு தவெகவில் சிலர் இணைந்தனர். சிலர், எடப்பாடியிடமே சரணடைந்துள்ளனர். தகுது நீக்கம் செய்யுங்கள் என்று எடப்பாடி தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எடப்பாடியின் கொறடா மீண்டும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து விட்டால் தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.
அந்த வகையில் அந்த கெடு நாளையுடன் முடிவதால்தான் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடியை சந்தித்து வருகிறார்கள். இவர்களை அரவணைத்தாலும், மன்னிப்பு கடிதம் எழுதி தரச் சொல்லி வலியுறுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் தமது இமேஜ் என்னவாவது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் சரணடைந்தவர்களும், சரணடைய விருப்பப்படுபவர்களும்.
இதனால், எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதற்காக மன்னிப்புக் கடிதம் என்கிற கடுமையை அவர் காட்டவேண்டுமா? இப்படி கடுமை காட்டி விட்டு தங்களுடன் எப்படி சகஜமாக இணைந்து அரசியல் செய்வார்கள் என யோசிக்க மாட்டாரா? என்று எடப்பாடி மீது வெளியே சொல்ல முடியாத அளவுக்கு புழுங்கிக்கொண்டிருக்கிறார்களாம்.
அமைச்சர் பதவி, வாரியப்பதவி என தவெக காட்டிய ஆசையில் மயங்கியிருக்கக் கூடாது என இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மாசெக்களும் என்கிறார்கள்.
- சிறப்பு நிருபர் எழில்
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications