பொதுக்குழுவில் ட்விஸ்ட்! ஒற்றை தலைமை வேண்டும்! 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமைதான் வேண்டுமென 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்தை சி.வி.சண்முகம் வாசித்து நிலையில் உடனடியாக ஓ பன்னீர்செல்வம் அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.
Recommended Video
நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. இதில் அழைப்பு விடுக்கப்பட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முன்னதாகவே மண்டபத்தில் குவிந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி சுமார் 11 மணி அளவிலேயே திருமண மண்டபத்திற்கு வந்தார்.

அதிமுக பொதுக்குழு
இதையடுத்து தனியார் பாதுகாவலர்கள் பலத்த பாதுகாப்போடு அவர் மேடைக்கு வந்தார். அவரை அடுத்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவதாக மேடைக்கு வந்தார். அப்போது அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.

தீர்மானங்கள் நிராகரிப்பு
பின்னர் பேசிய அனைத்து அமைச்சர்களும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறினர். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளருமான சிவி சண்முகம் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கோரிக்கை விண்ணப்பத்தினை வாசித்தார் சி.வி.சண்முகம்.

உறுப்பினர்கள் கடிதம்
அதில்," இரட்டை தலைமையால் கடுமையாக திமுகவை எதிர்த்து செயல்பட முடியாமல் உள்ளது. இரட்டைத்தலைமையால் ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
நூறாண்டு காலம் அதிமுக நீடிக்க எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்ற ஒற்றைத்தலைமை எற்படுத்த வேண்டும். இப்பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்து, ஒற்றைத்தலைமை தேவை என வலியுறுத்தி கோரிக்கை விடப்படுகிறது." என்றார்,

சிவி சண்முகம் கோரிக்கை
மேலும் இப்பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தொடர்ந்து அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம் கடிதங்களை சிவி சண்முகம் வழங்கினார் இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் எனக் கூறினார். அப்போது கோபமான ஓ பன்னீர்செல்வம் சட்டத்திற்கு புறம்பாக அதிமுக பொதுக்குழு நடைபெறுவதாகக் கூறி வெளியேறினார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications