"நிறுத்துடா.. பொன்முடியை வர சொல்லு".. வாயை கொடுத்து சிக்கிய சி.வி.சண்முகம்.. பாய்ந்தது கேஸ்
சிவி சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சென்னை: முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும், காவல்துறையை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஜரூராக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
அதேபோல கட்சி தலைவர்களும் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.. பெரும்பாலும் அதிமுக மேலிட தலைவர்கள் திமுகவை டார்கெட் செய்து பிரச்சாரம் செய்கிறார்கள்..

சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், வேலுமணி போன்றோர் பொங்கல் பரிசு தொகுப்பு, பொய்யான வாக்குறுதிகள் போன்றவைகளை முன்வைத்து திமுகவை விமர்சித்து வருகிறார்கள்.. ஆனால், ஆனால், விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்யும் சிவி சண்முகம் மட்டும், வேறு முறைகளில் பேசி, அதிமுகவுக்கு ஓட்டு கேட்டு வருகிறார்.. விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறது.. இவர்களை ஆதரித்து ஒவ்வொரு முறை சிவி சண்முகம் பேசும்போதும் அதில் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டு விடுகிறார்.

என்னாச்சு
"சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அனைத்து ஊர்களிலும் வந்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.. அப்பொழுது ஒரு பெட்டியை வைத்து அதில் உங்க பிரச்சனைகள் எல்லாம் மனுவாக எழுதி போட சொன்னார்... நீங்களும் நம்பி போட்டீங்க.. ஆனால் அதை பூட்டி சாவியை பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்... குடும்பத்திற்கு 1000 என்று சொல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு 1000 என்று சொல்லி விஞ்ஞான ரீதியில் ஏமாற்றிவிட்டார். பழனிசாமியும், நானும் தமிழகத்தின் பூர்வீக குடிகள்.

மாநில சுயாட்சி
உண்மையான தமிழர்கள். பிழைப்புக்காக தமிழ்பேசும் போலி தமிழர்கள் அல்ல. திமுக தேவைப்பட்டால் மாநில சுயாட்சி குறித்து பேசும், இல்லை என்றால் மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிக்கும். நான் முதலமைச்சரானால், அனைத்து கூட்டுறவு வங்கி நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் சொன்னாரே.. ஆனால், முதல்வராகிய ஸ்டாலினும், அவருடைய மகன் உதய நிதியும் பிரச்சாரத்தில் அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அடகு வையுங்கள் என்று சொல்லிவிட்டு, குறைந்த அளவிலான மக்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்து இருப்பதாகவும் மற்றவர்களை கைவிட்டதாகவும் சொல்கிறார்கள்" என்று சிவி சண்முகம் பிரச்சாரம் செய்தார்.

ஸ்டாலின்
எனினும் நேற்று முன்தினம் சண்முகத்தின் பிரச்சாரம் போலீசில் புகார் வரை சென்றுவிட்டது.. சிவி சண்முகம் பேசும்போது, "ஸ்டாலின், நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டு இருக்கிறார், நீட் தேர்விற்கு சீராய்வு மனு திமுகஅரசு தாக்கல் செய்யவில்லை.. நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துகிறது, ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்த அவர் ஏன் நீட் குறித்து நேரடி சவாலில் பேச ஸ்டாலின் தயங்குகிறார்? " என்று அடுக்கடக்காக சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.

திடீர் கூச்சல்
சிவி சண்முகம் இப்படி பேசி கொண்டே இருக்கும்போது, பிரச்சார மேடையில் திடீரென ஒருவர் கூச்சலிட்டார்.. "பேசுவதை நிறுத்து" என்று கத்தினார்.. அதை பார்த்த சிவி சண்முகம், "அதிமுகவினரை மிரட்ட திமுக நினைக்க வேண்டாம்... திமுகவினர் ஒருத்தனுக்கு பிறந்து இருந்தால் இந்த மேடையில் 12 மணி வரை நிற்க தயார் தைரியம் இருந்தால் வா.. இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் எனக்கூறினார். பொன்முடியை வர சொல்லுடா, உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன்?" என்று சவால்விட்டதால் பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்டுவிட்டது.

2 பிரிவுகள்
மேலும், அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பார்த்து, வாக்குவாதம் செய்த நபரை காவல்துறைதான் அனுப்பி வைத்தது போன்ற தோரணையில் பேசினார். மேலும், "போலீஸ்காரர்கள் பொன்முடிக்கு சென்று..." என்ற ஒரு வார்த்தையை உதிர்த்தார். போலீஸை ஒருமையிலும், தரக்குறைவாகவும் சிவி சண்முகம் பேசிய வீடியோ, நேற்றெல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலானது.. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி பொது இடத்தில் காவல் துறையினரை அவதூறாகவும், ஆபாசமாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சண்முகம் மீது பொது இடத்தில் காவல் துறையினரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தல் , ஆபாசமாக பேசுதல் என 294b, 504 போன்ற 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications