Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மிக மிகக் குறைந்த விலையில் தீபாவளி பட்டாசு”.. உஷாரய்யா உஷாரு.. சைபர் கிரைம் போலீசார் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், மிகக் குறைவான விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு நூதன மோசடி செய்யும் ஆன்லைன் மோசடி கும்பல் களமிறங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி பண்டிகை. மக்கள் ஏற்கனவே தங்கள் வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி, புதிய ஆடைகள் வாங்குவது, பட்டாசுகள் வாங்குவது, இனிப்புகள் - பலகாரங்கள் செய்வதற்கான பொருட்கள் வாங்குவது என தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தயாராகி விட்டனர்.

diwali 2024 diwali diwali crackers

தீபாவளி பட்டாசு: சிறுவர் சிறுமிகள் இருக்கும் வீடுகளில் இப்போதே பட்டாசு சத்தங்களும் கேட்கத் தொடங்கிவிட்டன. பலர், ஆன்லைன் வாயிலாகவும் பட்டாசுகளை ஆர்டர் செய்துள்ளனர். சிவகாசியில் உள்ள பட்டாசு நிறுவனங்களில் பலரும் பட்டாசுகளை ஆர்டர் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்களைக் குறி வைத்து ஏராளமான மோசடி கும்பல்களும் களமிறங்கியுள்ளன. நம்ப முடியாத விலையில் பட்டாசு வாங்கலாம் என்றும், உங்கள் வீடுகளுக்கே டெலிவரி சார்ஜ் இல்லாமல் பட்டாசுகளை அனுப்புகிறோம் என்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த சீசனுக்கு பட்டாசு ஆஃபர் உருட்டு: சீசனுக்கு ஏற்றார்போல உருட்டி, மக்களின் பர்ஸ்களை பதம் பார்க்கும் ஃப்ராடு கும்பல் இப்போது தீபாவளி பட்டாசு விற்பனை ரூபத்தில் வந்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்வதாக கூறி மோசடிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக காவல்துறை சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சைபர் கிரைம் எச்சரிக்கை: கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல், பண்டிகை கால விற்பனையை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக கவர்ச்சிகரமான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை வடிவமைக்கின்றனர்.

மக்கள் வாட்ஸ்-அப் மூலமாகவோ அல்லது செல்போன் அழைப்பு மூலமாகவோ இவர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது நல்ல ஆஃபர்கள் இருப்பதாக கூறி பட்டாசுகளை வாங்க அறிவுறுத்துகின்றனர். இந்த இணையதளங்கள் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு உண்மையானது போல தோன்றினாலும் இவை பணத்தைத் திருடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை. இவை பெரும்பாலும் உண்மையான தோற்றமுடைய தயாரிப்புப் பட்டியல்கள், விலைகள் மற்றும் பணம் செலுத்தும் விருப்பங்களைக் காண்பிக்கும்.

பணம் செலுத்தியதும் எஸ்கேப்: பணம் செலுத்தும்போது சில கூடுதல் தள்ளுபடிகளும் சேர்த்து காண்பிக்கப்படும். ஆனால், பணம் செலுத்தியவுடன், ஆர்டர் செய்த பொருட்கள் நம்மை வந்து சேரும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. இவ்வாறான தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பணத்துடன் தலைமறைவாகி விடுகிறார்கள்.

மேலும், இந்த வலைதளங்களிலுள்ள தங்கள் தகவல்களையும் நீக்கிவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை பறிகொடுக்க நேரிடுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட நிதி தகவல்களைப் பகிர்வதன் மூலம் அவர்களது சுயவிவரங்களை மோசடிக்காரர்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, மோசடிகளுக்கு இரையாகாமல் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கவனம் மக்களே: பல்வேறு முன்னணி பட்டாசு நிறுவனங்களும் ஆன்லைன் வாயிலாக ஆர்டரை பெற்று பட்டாசுகளை உரிய முறையில் டெலிவரி செய்து வருகின்றன. எனவே, நீங்கள் பட்டாசு ஆர்டர் செய்யும் நிறுவனத்தின் இணையதளம் உண்மையானது தானா என நன்கு சோதித்து, கடையின் லைசென்ஸ் உரிமம், ஜி.எஸ்.டி எண், முகவரி, இருப்பிடம், தொடர்பு எண் போன்றவை உள்ளதா? அது சரியான தகவலா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு பட்டாசுகளை ஆர்டர் செய்யலாம். அதிக தள்ளுபடி என்ற கவர்ச்சிகர விளம்பர மோசடி கும்பலின் வலையில் விழுந்து பணத்தை இழந்துவிட வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+