புத்தாண்டு இலவச ரீசார்ஜ் என முதல்வர் ஸ்டாலின் பெயரில் பரவும் மெசேஜ்.. சைபர் கிரைம் போலீசார் வார்னிங்
சென்னை: புத்தாண்டையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் 3 மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக சமூக வலைதளங்களில், ஒரு லிங்க் உடன் தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் செல்போன் சேவை கட்டணத்தை கடந்த ஜூலை மாதம் அதிரடியாக உயர்த்தியது ஜியோ நிறுவனம். 25% வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வந்தது. ரூ. 155 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்பட்டது. தினசரி 1 ஜிபி நெட் வழங்கும் திட்டமானது ரூ. 209 ஆக இருந்து வந்த நிலையில் இந்த ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்த்தப்பட்டது.

செல்போன் சேவை கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திவிடும். அந்தவகையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இந்த கட்டண உயர்வால் கோடிக்கணக்கான செல்போன் பயன்பாட்டாளர்கள் மாதந்தோறும் அதிக செலவு செய்ய வேண்டி உள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய செல்போன் வாடிக்கையாளர்கள் பலரும், புலம்பிக்கொண்டே அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஆசை காட்டி, மோசடி செய்யும் கும்பல், ஆஃபர் எனக் கூறி அப்பாவி மக்களை குறி வைத்து களமிறங்கி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது. அதில், 'புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை' என்ற தலைப்புடன், 'புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும், 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக் குறிப்பிட்டு, ஒரு இணைய லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இதனை நம்பி உள்ளே சென்றால் நமது தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதோடு, மோசடி பணப் பரிவர்த்தனை மூலமாக நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற லிங்க்கை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் கும்பலை நம்பி பணத்தை தொலைக்க வேண்டாம். பொதுமக்கள் யாரும், போலியான ஆஃபர் ரீசார்ஜ் விளம்பரங்களை நம்பி மோசடிக்கு ஆளாக வேண்டாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications