Dummy Ditwah?: தாமதமாகும் டிட்வா புயல்! நடுக்கடலில் டம்மி பீஸான சிஸ்டம்! தமிழக கடற்கரைக்கு எப்போது வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் தாமதமாக தமிழக கடற்கரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வறண்ட காற்றின் காரணமாகவும் ஈரக்காற்று முறிவின் காரணமாகவும் டிட்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயலானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி காரைக்காலில் வடகிழக்கே 90 கி.மீ. தூரத்திலும் வேதாரண்யத்திற்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 130 கி.மீ. தூரத்திலும் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வடக்கு, வடகிழக்கில் 170 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவிலும் இந்த டிட்வா புயல் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம்- புதுவை கடலோர பகுதிகளுக்கு இணையான பகுதியில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு நோக்கி வரும் பட்சத்தில் இந்த புயலானது வங்கக் கடலில் தென்கிழக்கே தமிழகத்தில் இருந்து 70 கி. மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் மையம் கொள்ளும்.

Cyclone Ditwah Weather

தமிழகம்

தமிழக, புதுவை கடற்கரையை இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் நெருங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட வடதமிழக கடலோர பகுதியை புயல் நெருங்கும் போது நேற்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என சொல்லப்பட்டது.

ஆரஞ்சு அலர்ட்

இந்த நிலையில் காலை முதலே சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுத்த அளவிற்கும் மழை இல்லாமல் இருக்கிறது. இதற்கு காரணம் வறண்ட காற்றாலும் ஈரக்காற்றின் முறிவு காரணமாகவும் டிட்வா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என சொல்லப்படுகிறது.

டிட்வா புயல்

இதனால் டிட்வா புயல் தாமதமாக நகர்ந்து வருகிறது. எனவே தமிழக கடலோரத்திற்கு அருகே இன்று பிற்பகல் அல்லது மாலை நேரத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரையை தொட்டபடி பயணிக்கும்

இந்த புயல் கரையை தொட்டப்படியே பயணிக்கும் பைபாஸ் ரைடர் என்பதால் இது கரையை கடக்காது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை

டிட்வா புயல் காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரையில் அதிக மழை

டிட்வா புயலால் கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரை பகுதியில் 250 மி.மீ. மழை பெய்துள்ளது. அது போல் வேளாங்கண்ணி பகுதியில் 133 மி.மீ.மழையும் திருவாரூரில் 137 மி.மீ. மழையும், நன்னிலம் பகுதியில் 123 மி.மீ.மழையும் திருத்துறைப்பூண்டி பகுதியில் 113 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இயல்பு நிலை

கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் இன்று மழையும் காற்றும் குறைந்துள்ளது. எனினும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. பாம்பன் பாலத்திலும் நேற்று மாலை முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலா தலங்கள் வெறிச்

அது போல் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கோவளம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் சிலர் மாற்று பாதை வழியாக உள்ளே நுழைகிறார்கள். அங்கு காற்று கடுமையாக வீசி வருகிறது, ராட்சத அலைகளும் எழும்புகிறது. இதை கருத்தில் கொள்ளாமல் சிலர் செல்பி எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+