வலுவிழந்தது டிட்வா புயல்.. ஆனாலும் மழை விடாது.. இரவு 10 மணி வரை சென்னை + 10 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழ்ந்தது என்றும் இருப்பினும், தமிழகத்தில் இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்றும் இன்றும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று சென்னையிலும் காலையில் இருந்து கனமழை கொட்டியது. ஆனால் மதிய நேரத்தில் ஒரு சில இடங்களில் வெயில் அடித்தது.

எனினும் பின்னர் இடையிடையே சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இரவில் மீண்டும் லேசான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடற்கரையோரங்களில் பலத்த காற்று வீசியதால் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறியிருப்பதாவது:- சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழ்ந்தது. இருந்த போதிலும், இன்று இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று இரவு 10 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications