கஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்? வானிலை மையம் விளக்கம்!
ஃபனி புயல் பெரும்பாலும் தமிழகத்தில் கரையை கடக்கும் போது 150 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஃபனி புயல் பெரும்பாலும் தமிழகத்தில் கரையை கடக்கும் போது 150 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடக்கும்
இந்த புயல் பெரும்பாலும் தமிழகத்தில் கரையை கடக்கும். 80% இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும். பெரும்பாலும் சென்னை அருகே புயல் கரையை கடக்கும். சமயங்களில் இந்த புயல் டெல்டாவை நோக்கி நகரவும் வாய்ப்புள்ளது.

என்ன வேகம்
இந்த புயல் பெரும்பாலும் 150 கிமீ வரை இருக்கும் என்று வானிலை மையும் கூறியுள்ளது. இந்த புயல் வேகமாக வலுவடைந்து கொண்டே செல்கிறது. அதனால் இது மிகவும் வலுவான புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால்தான் தற்போது தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கஜா புயல்
அதேபோல் இது கஜா புயலைவிட மிகவும் வலிமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் வீசிய கஜா புயல் தமிழகத்தை உலுக்கிய மிக மோசமான புயல்களில் ஒன்றாகும். இதனால் டெல்டா மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை
இப்போது ஃபனி புயல் கஜாவை விட வலுவாக இருக்கும் என்று கூறப்பட்டு இருப்பதால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்னும் தமிழக மக்கள் கஜா புயலின் பாதிப்பில் இருந்தே வெளிவரவில்லை. இந்த நிலையில் இன்னொரு வலுவான புயல் தமிழகத்தை தாக்குவது மக்களை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications