மரப்பாதை மட்டுமா? சென்னை மெட்ரோவுக்கும் கடும் சேதாரம்! மாண்டஸ் புயலால் 3.45 கோடி மதிப்பில் சேதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாண்டஸ் புயல், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பில் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

மெட்ரோ ரெயில் நிலைய மேற்கூரைகள், வழிகாட்டி பலகைகள் சேதம் மற்றும் குழாய் உடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. சீரமைக்கும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் மாண்டஸ் புயலால் ரூ. 3 கோடியே 45 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. தொடர் கனமழையால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வழக்கத்தை விட பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் முறிந்தும் விழுந்தன. சென்னையில் பெய்த கனமழை மற்றும் வீசிய புயல் காற்றால் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன.

மின் விநியோகம் தடை

மின் விநியோகம் தடை

மாண்டஸ் புயலினால் மெரினா கடற்கரையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மரப்பாதை சேதமடைந்தது. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினர். இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையங்கள் சேதம்

மெட்ரோ நிலையங்கள் சேதம்

சென்னையில் உள்ள 41 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 4 குழுக்கள் ஆய்வு செய்து மாண்டஸ் புயலால் ஏற்பட்ட சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளது. கோயம்பேடு, சிஎம்பிடி பேருந்து நிலையம், ஈக்காட்டுத்தாங்கல், சின்னமலை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரா ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகைள் சேதம் அடைந்துள்ளன.

3 கோடியே 45 லட்சம்

3 கோடியே 45 லட்சம்

கோயம்பேடு பணிமனை மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்கள் வானக நிறுத்தும் இடத்தில் உள்ள குழாய்கள் சேதம் அடைந்துள்ளன. இவ்வாறாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதங்களை உடனடியாக சீரமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+