வருமான வரி நோட்டீஸ் வந்ததால் சிலிண்டர் நாடகம்.. பாஜக நிர்வாகி பேச்சுக்கு ஹோட்டல் சங்கம் எதிர்ப்பு
சென்னை: வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததை கண்டுபிடித்து நோட்டீஸ் அனுப்பியதால் தான் ஹோட்டல் உரிமையாளர்கள் சமையல் கேஸ் சிலிண்டர் இல்லை என நாடகமாடுகிறார்கள் என்று பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பாஜக மாநில செயலர் அஸ்வத்தமான் கூறுகையில், கடந்த மார்ச் 9ம் தேதி வருமான வரித்துறையில் இருந்து நாடு முழுவதும் 62000 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அவர்கள் போலியாக வருமானத்தை மறைத்து அரசுக்கு வரி செலுத்த வேண்டிய வரியை ஏய்ப்பு செய்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தார்,

மேலும் இதனை வருமான வரித்துறை கண்டுபிடித்து, 62 ஹோட்டல்களில் ஆய்வு செய்ததில் 408 காடி வருமானம் மறைத்தது தெரியவந்தது. இந்த விவரம் மதியம் நோட்டீஸாக அனுப்பப்பட்டதும், அன்றிரவு கேஸ் தீர்ந்துவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறார்கள் என அஸ்வத்தமான் கூறியிருந்தார்.
இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறையில் யாரு முறைகேடு செய்ய முடியாது என மத்திய நிதித்துறை அமைச்சரே அறிவித்துவிட்ட நிலையில் என்னை நிறுவனங்களின் தவறுகளை தமிழகத்தில் உள்ளவர்களை நோக்கி மாற்றி விடுவதை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளளார்,
வணிக சமையல் சிலிண்டர், நான்கு நாட்களாக கிடைக்கவில்லை.. இதனை எண்ணெய் நிறுவனங்களே தெரிவித்துவிட்டன. யாராவது செய்த தவறுக்கு தமிழத்தில் உள்ளவர்களை குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காடடமாக கூறினார்.
வருமான வரித்துறை கடந்த மார்ச் 9ம் தேதி அனுப்பிய நோட்டீஸ் என்ன
வருமான வரித்துறை கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஓட்டல்களில் நடத்திய ஆய்வின் மூலம் உணவகங்கள் பின்பற்றும் முறையற்ற வரி ஏய்ப்பு உத்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனை தரவுகள் AI தொழில்நுட்பம் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. உணவகங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் (ITR) காட்டிய வருவாய்க்கும், உண்மையில் நடந்த பரிவர்த்தனைகளுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பல உணவகங்கள் தங்களின் உண்மையான விற்பனையை குறைத்துக் காட்டுவதற்காக மொத்த பில்களை நீக்குதல் (Deletion of bulk bills) மற்றும் கணக்குகளில் மாற்றங்களைச் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன. சில விற்பனைப் பதிவுகள் நிதி கணக்குகளிலோ அல்லது வரித் தாக்கல் படிவங்களிலோ முழுமையாகக் காட்டப்படவில்லை. சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் திட்டமிட்டே விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
22 மாநிலங்களில் உள்ள 46 நகரங்களில் மொத்தம் 62 உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சுமார் ₹408 கோடி மதிப்பிலான விற்பனை வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரி செலுத்துவோர் தாங்களாகவே முன்வந்து உண்மையான வருமானத்தைத் தெரிவிக்கும் "நம்பிக்கை சார்ந்த அணுகுமுறையை" வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications