சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்வர் ராஜா செய்தது தவறு.. நீக்கியது சரியான நடவடிக்கையே.. ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கையே என அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் அன்வர்ராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேன் தற்காலிகமாக அவை தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அன்வர்ராஜாவை பொறுத்தவரைக் கழக நடவடிக்கை. இதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலே கழகத்தின் கொள்கைகளுக்கும், கழகத்தின் கோட்பாடுகளுக்கும், முரண்பாடான வகையில் கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில், செயல்பட்ட காரணத்தினால் கழகத்தின் அடிப்படை பொறுப்பு மற்றும் அத்தனை பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்னாது.. இவ்வளவு ரூபாயா?.. இன்று முதல் கேபிள் டிவி கட்டணமும் உயர்கிறது.. எகிறும் மாதாந்திர பட்ஜெட்என்னாது.. இவ்வளவு ரூபாயா?.. இன்று முதல் கேபிள் டிவி கட்டணமும் உயர்கிறது.. எகிறும் மாதாந்திர பட்ஜெட்

கழகம் ஒரு மாபெரும் இயக்கம்

கழகம் ஒரு மாபெரும் இயக்கம்

கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து, ஜெயலலிதா காலத்திலிருந்து இயக்கத்தைப் பொறுத்தவரை ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கின்ற ஒரு இயக்கம். எனவே கழகத்திலிருந்து கொண்டு கழகத்தை விமர்சனம் செய்வது, கழக கூட்டங்களிலே அதாவது அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம் தெரிவிப்பது நல்லதல்ல.

வெளியே சொல்லக் கூடாது

வெளியே சொல்லக் கூடாது

நான்கூடதான் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். கட்சியின் கொள்கையின்படிதான் நான் கருத்து சொல்ல முடியும். கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டது அனைத்தையும் வெளியே வந்து சொல்வது, அதன் மூலம் விமர்சனங்கள் செய்வது என்பது எந்த விதத்தில் ஏற்க முடியும்?. அது கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் செயலாகதான் கருதமுடியும். இந்த போக்கை நாம் அனுமதிப்பதின் மூலம் கழகத்தில் புற்றீசல்போல எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள்.

66 எம்எல்ஏக்கள்

66 எம்எல்ஏக்கள்

கட்டுப்பாடு இல்லாமல் போகும். எனவே அன்வர்ராஜா மீது எடுத்த நடவடிக்கை என்பது ஒரு சரியான நேரத்தில், உரிய காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதுதான் சரியான விஷயமாக நான் குறிப்பிடுகிறேன். இதுபோன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆள் ஆளுக்கு விமர்சனம் செய்துகொண்டிருப்பார்கள். எங்களுக்கு 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

75 உறுப்பினர்கள்

75 உறுப்பினர்கள்

கூட்டணிக் கட்சியோடு சேர்த்து 75 உறுப்பினர்களை பெற்றுள்ளோம். 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். எங்களுக்கும் திமுகவுக்கும் 10 லட்சம்தான் ஓட்டு வித்தியாசம். திமுகவுக்கும் எங்களுக்கும் 3 சதவீதம்தான் வித்தியாசம். இப்படி அனைவரும் ஒற்றுமையோடு இருக்கும்போது ஒருசிலர் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டால் கட்சி எப்படி அதனை வேடிக்கை பார்க்கும்.எனவே கட்சி இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எடுத்துள்ளது.

Recommended Video

    அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - ஜெயக்குமார்
    அதிகாரம்

    அதிகாரம்

    பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு அந்த அதிகாரத்தின்படிதான் கட்சி வழிநடத்தப்படுகிறது. எப்போதும் பொதுக்குழுதான் அதிகாரம். ஆனால் அடிப்படை விதியாக இருக்கின்ற அடிமட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் விதி என்பது எந்த விதத்திலும் மாற்றம் இல்லை.அது முழுமையாக இருக்கும். அடிப்படை உறுப்பினர்களை நேடியாக தேர்வு செய்யும் விதி என்பது எந்தவிதத்திலும் மாற்றம் இல்லை. 5 ஆண்டுக்காலம் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். 5 ஆண்டு மற்றும் 5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள்தான் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Ex Minister D Jayakumar says that removal of Anwar Raja's is right decision.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X