சூப்பர் செய்தி! 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு.. இப்போது தினசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா
சென்னை: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் பொதுமக்களுக்கு 100 நாட்கள் கட்டாயம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் வழங்குகிறது. அதன்படி இத்திட்டத்திற்காக மத்திய அரசு ஏற்கனவே ரூ. 674 கோடியை விடுவித்துவிட்டது. இந்தச் சூழலில் மாநில அரசின் பங்கான 25 சதவீதம், அதாவது ரூ 224 கோடியை தமிழக அரசு தற்போது விடுவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் இப்போது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஊராட்சித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் ஊரக வேலை உறுதி திட்டத்தில், 2021-2022 நிதியாண்டிற்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த சம்பள உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் என இரு பாலருக்கும் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.281 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் வழங்கப்பட்ட தினசரி ஊதியத்தை விட 8 ரூபாய் அதிகமாகும்.
இதில் நிர்வாக செலவுகளுக்கு ரூபாய் 49.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ 949.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு 2026! விடுபட்ட அனைத்து நில அளவை எண்களுக்கும் மாற போகும் புதிய ரூல்ஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications