Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளந்த முதுகு.. அண்ணி அனுப்பின போட்டோ.. டான்ஸ் மாஸ்டர் ரமேஷை தேடி வந்த 4 பேர்.. கொலை? தற்கொலை? மர்மம்

டான்ஸ் மாஸ்டர் ரமேஷை சம்பவத்தன்று 4 பேர் தேடி வந்ததாக பகீர் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்கொலை செய்து கொண்ட டான்ஸர் ரமேஷ் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பரபரப்பான சில தகவல்களும் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வந்தார் டான்சர் ரமேஷ்... தன்னுடைய டான்ஸ் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிரபலமடைந்தார்.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் ரஜினி வெளிவர உள்ள ஜெயிலர் படத்திலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, ரமேஷ் அசத்தியிருந்தார்.

மதுபோதை

மதுபோதை

இந்நிலையில்தான், ரமேஷ் தன்னுடைய குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்... இதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், தற்கொலை தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்தபடியே உள்ளன.. அதாவது, பிறந்த நாள் அன்று, 2ம் மனைவியிடம், மது அருந்த ரமேஷ் பணம் கேட்டாராம்.. ஆனால், மனைவி பணம் கொடுக்கவில்லையாம். இந்த விரக்தியில் தான், அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

10வது மாடி

10வது மாடி

இதையடுத்து, ரமேஷின் முதல் மனைவியும், ரமேஷ் மரணம் கொலை என்று போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், மரணத்தின் காரணம் குறித்து போலீசாரின் விசாரணை துரிதமாகி வருகிறது. இதனிடையே, ரமேஷின் தாய் சொல்லும்போது, "நாங்கள் சென்று பார்க்கும் போது ரமேஷ் உடல் மிகவும் மோசமான நிலையில் கைகால்களை உடைந்து முதுகு பிளந்தது போன்று இருந்தது. உடனே போலீசார் வந்து மறித்து விட்டனர் முகத்தை கூட பார்க்கவில்லை" என்றார். ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது தம்பி பல்வேறு கருத்துக்களை மீடியாக்களிடம் பகிர்ந்துள்ளார்.. "ரமேஷ் 10ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று முதலில் சொன்னார்கள்.. அண்ணிதான் போன் செய்தாங்க..

பர்த்டே பார்ட்டி

பர்த்டே பார்ட்டி

ஆனால், நாங்கள் அதை நம்பவில்லை, உடனே போட்டோ எடுத்து அனுப்புமாறு சொன்னோம்.. போட்டோவும் எடுத்து அனுப்பினாங்க.. அந்த போட்டோவை பார்த்தபிறகுதான், எங்களுக்கு நடந்த சம்பவம் தெரியும்... ரமேஷுக்கு 2 மனைவிகள் இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி 2வது மனைவியிடமே சென்று வசிக்க ஆரம்பித்தார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், எங்களுக்கு இந்த தகவல் வந்தது.. ஒன்னுமே புரியல.. ஏன்னா, அவர் தற்கொலை செய்துக் கொள்ளக்கூடியவரே கிடையாது.. அண்ணனோட பிறந்தநாள் வேற.. எவ்வுளவு குடித்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அவர் முடிவெடுக்க மாட்டார்..

மாஸ்டர் ரமேஷ்

மாஸ்டர் ரமேஷ்

எவ்வளவு பிரச்சனை நடந்தாலும்சரி, அதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றுவிடுவார்... நிறைய குடிக்க வேண்டும் என்பதால்தான் அவர் மறுபடியும் முதல் மனைவியிடம் சென்றிருக்கிறார்.. எங்கள் அண்ணி உடன் இருக்கும்போது அவரை குடிக்க விடமாட்டார்.. அப்படியே குடிக்க வேண்டும் என்றாலும் குறைவான மதுவையே தருவார்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதல்மனைவியின் அக்கா அமுல் ராணி, சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.. நேற்று மாலை கே.பி. பார்க் குடியிருப்புக்கு 4 பேர் வந்திருக்கிறார்கள்.. அப்போது டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று கேட்டு அவரிடம் டான்ஸ் கற்றுக்கொள்ள வந்ததாகவும் சொல்லி இருக்கிறார்கள்..

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

ஆனால் ரமேஷ் கீழே விழுந்து இறந்த பிறகு அந்த 4 பேரையும் காணவில்லை.. ரமேஷ் இறப்பில் சந்தேகம் இருக்கிறது" என்று ராணி கூறியுள்ளார்... ரமேஷின் இறப்பு சந்தேகத்துக்கிடமாக இருப்பதாக சொன்னதால், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த ரமேஷின் சடலம், தலை பகுதி மற்றும் உடல் பகுதியில் ஸ்கேன் செய்யப்பட்டது.. உயிரிழந்த ரமேஷுக்கு 2 மனைவிகள் இருந்த நிலையில், இவர் பிரபலம் ஆன பிறகு, முதல் மனைவி சித்ரா மற்றும் 2-வது மனைவி இன்பவள்ளிக்கு இடையே தகராறு அடிக்கடி வந்துள்ளதாகு தெரிகிறது..

ஸ்கேன்

ஸ்கேன்

அதனால், சமீபத்தில்தான் 2-வது மனைவி வீட்டில் தங்கி வந்துள்ளார்.. இப்போது இண்டாவது மனைவி தரப்பில், ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. முதல் மனைவி சித்ரா தரப்பில் தனது கணவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் தரப்பட்டுள்ளது.. இதற்கு நடுவில் தற்கொலை செய்த அதேசமயத்தில் யரோ 4 பேர் அப்பார்ட்மென்ட்டுக்கு ரமேஷை தேடி வந்ததாக சொல்கிறார்கள்.. இதனால், இது தற்கொலையா? தற்கொலையா? ரமேஷ் தானாக மேலிருந்து விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளிவிடப்பட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை துரிதமாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+