ரயில் பயணத்தில் ரிசர்வேசன் செய்யாதவர்களும் படுக்கை வசதியில் பயணிக்கலாம் எப்படி தெரியுமா?
சென்னை: சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய தென்னக ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணம் செய்ய சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டும். கும்பகோணம் வழியே செல்லும் எழும்பூர் - ராமேஸ்வரம் ரயிலில் எஸ் 12 , எஸ் 13 பெட்டிகள் டிரிசர்வ்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட படுக்கை வசதி பெட்டிகள், குறிப்பிட்ட சில நகரங்களுக்கிடையே முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
வண்டி எண்: 16382 கன்னியாகுமரி-புனே இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 15ஆம் தேதி முதல் கன்னியாகுமரி-எர்ணாகுளம் இடையே எஸ்-5 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
வண்டி எண் 22638 மங்களூரு-சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் ஈரோடு-எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 16723 எழும்பூர்-கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் நெல்லை-கொல்லம் இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
வண்டி எண் 16724 கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி முதல் கொல்லம்-நெல்லை இடையே எஸ்-11 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
வண்டி எண் 22637 எம்.ஜி.ஆர் சென்ட்ரல் -மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி முதல் எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-சேலம் இடையே எஸ்-4 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
ராமேஸ்வரம், மங்களூரு எக்ஸ்பிரஸ் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முதல் மானாமதுரை-ராமேஸ்வரம் இடையேவும், ராமேஸ்வரம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையேவும் எஸ்-12, எஸ்-13 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.
எழும்பூர்-மங்களூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் திருச்சி-மங்களூரு இடையே எஸ்-10 படுக்கை பெட்டி முன்பதிவு செய்யப்படாத பெட்டியாக இயக்கப்படும்.
மங்களூரு-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் மங்களூரு-திருச்சி இடையே எஸ்-7 பெட்டியும், மங்களூரு-கரூர் இடையே எஸ்-8, எஸ்-9, எஸ்-10 படுக்கை பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும்.
தூத்துக்குடி-மைசூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் தூத்துக்குடி-மதுரை இடையே எஸ்-10, எஸ்-11 படுக்கை பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications