பட்டா மனை அப்ரூவல்? அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகள்.. "அப்பீல் மனு"வுடன் கோட்டைக்கு போன பெயிரா.. ஏன்?
சென்னை: அணுகுசாலை பிரச்சனையை, மேல் முறையீட்டு மனு மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் நலன் கருதி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பெயிரா முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.. பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களின் நலன் கருதி எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

"தமிழகம் முழுவதும் கடந்த 20.10.2016 வரை அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை தாராளமாக விற்பனை செய்வதற்கு அரசு அனுமதித்திருந்தது.இதன் அடிப்படையில் புதிய வீட்டுமனை பிரிவுகளில் சாலைகளை அமைப்பதற்கு 20.10.2016 வரை எந்த வரம்பும் அரசு தரப்பில் விதிக்கப்படவில்லை.
அனுமதியற்ற பட்டா: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் ஏற்கனவே அனுமதியற்ற பட்டா வீட்டுமனைகள் அமையப்பெற்று, இதில் அணுகு சாலைகள் 12 அடி, 15 அடி, 16 அடி 18 அடி 20 அடி என தற்போது நிலையில் அணுகு சாலைகள் புழக்கத்தில் உள்ளது.
இப்படிபட்ட அனுமதியற்ற வீட்டுமனைகளையும், மனைப் பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்று கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய கொள்கையை கடந்த 2017 ஆம் ஆண்டு வகுத்து, அதற்கென சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி, மனை வரன்முறை சட்டம் அரசாணை எண். 78 மற்றும் 172 ஆக இரு அரசாணைகளை வெளியிட்டன.
இந்த அரசாணையிலும் மனைகளையும், வீட்டுமனை பிரிவுகளையும், மனை வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்கு (Guidelines for regularization) பிரிவு 7. உட்பிரிவு (d) இல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குறைந்தபட்சம் 4.8 மீட்டர் அதாவது 16 அடி அணுகு சாலை இருக்க வேண்டும் என்றும், பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 3.6 மீட்டர் அணுகு சாலை அதாவது 12 அடி இருக்க வேண்டும் என்றும் விதிகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இதுவரை தோராயமாக 36,000 வீட்டுமனை பிரிவுகளுக்கு நகர் ஊரமைப்பு துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய வீட்டுமனைப்பிரிவு: ஆனால் அதன் பிறகு கடந்த 2019ல் வகுக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019 (TNCDBR-2019) இல் புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான அணுகு சாலை குறைந்தபட்சம் 7 மீட்டர் அதாவது 23 அடி அணுகு சாலை இருக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது.
முரண்பாடாக உள்ள இந்த அணுகு சாலையின் அளவினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண் 78/2017 இல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றியமைத்து எளிமைப்படுத்திட வேண்டும் என்கிற எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்று, தற்போது பகுதியாக தீர்வினை ஏற்படுத்தும் வகையில் அரசாணை எண் 58/2024 ஆக வெளியிட்டுள்ளது,
புறநகர் ஊராட்சி: இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகரங்களை ஒட்டியுள்ள ஒருசில புறநகர் ஊராட்சிகளில் புதிய வீட்டுமனை பிரிவுக்கு அனுமதி பெற அணுகு சாலை அளவு குறைந்தபட்சம் 7.0 மீட்டர் எனவும், பேரூராட்சிகளில் அணுகு சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.5 மீட்டர் எனவும், கிராம ஊராட்சிகளில் அணுகு சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.0 மீட்டர் எனவும் இருக்க வேண்டும் என தளர்வளித்து பகுதி தீர்வினை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோன்று தமிழகம் முழுவதும் மேற்கண்ட அரசாணை எண் 78 ல் குறிப்பிட்டுள்ளபடி மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவின் 12 அடி, 15 அடி, 16 அடி, 18 அடி மற்றும் 20 அடி உள்ள சாலைகளின் வழியாக சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும், அதேபோன்று நகர்ப்புறங்களில் காலம் காலமாக பயன்பாட்டில் அமைந்துள்ள 16 அடி, 18 அடி மற்றும் 20 அடி சாலைகள் வழியாகவும் சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும், புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அரசாணை: எனவே, அந்தந்த நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டுமனை கனவுகள் நினைவாகும் வகையில் மேற்கண்ட அரசாணை எண் 78 ல் குறிப்பிட்டுள்ளபடி தொலைநோக்குப் பார்வையோடு மேற்கண்ட அரசாணையில் (G.O NO 58/2024) திருத்தம் கொண்டு வந்து, புதிதாக ஏற்படுத்தும் வீட்டுமனை பிரிவுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின்படி அனுமதித்து நடைமுறைப்படுத்தி உதவிட வேண்டும்.
அதுவரை ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் இப்படி பழமையாக அமைந்துள்ள 18 அடி சாலையின் வழியே சென்று, அதன் பின்புறம் அமைந்துள்ள நிலங்களை, புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவுபடி, "மேல் முறையீடு மனு" பெற்று அதன் அடிப்படையில் தீர்வு காண தமிழக முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்" என்று பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications