அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு ஓகே.. சார் பதிவாளர்களுக்கு டவுட்? பதிவுத்துறைக்கு பெயிரா கோரிக்கை
சென்னை: அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வது சம்பந்தமாக, சார் பதிவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், சரியான வழிகாட்டுதலுடன் கூடிய தெளிவான சுற்றறிக்கையினை வெளியிட வேண்டும் என பதிவுத்துறைக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அசல் பத்திரம் தொலைந்தாலும் பதிவு செய்யலாம், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் சொத்து சம்பந்தமான ஆவணங்களை சரி பார்த்து பதிவு செய்யலாம், அதற்கு அசல் பத்திரம் இனி தேவையில்லை என நீதிமன்றங்களின் உத்தரவை பின்பற்றக் கோரி உத்தரவு பிறப்பித்துள்ள தமிழ்நாடு பதிவுத்துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் சம்பந்தப்பட்ட நிலங்களை பத்திர பதிவு செய்யலாம் என்கின்ற வரலாற்று சிறப்புமிக்க கூடுதல் பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடிதத்தை வரவேற்று, பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பதிவுத்துறை: கடந்த 2022ஆம் ஆண்டு பதிவுத் துறை சட்டப்பிரிவு 55(A) இன் படி அசல் ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை அடுத்து, பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக தங்கள் கைவசம் அசல் ஆவணங்களில்லாத பொதுமக்கள் பதிவு அலுவலகத்தில் தங்களது சொத்துக்களை வாங்கவும், விற்கவும் முடியாத கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
மேலும் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அசல் ஆவணங்களை தவறவிட்டாலோ, களவு போனாலோ அல்லது பறி கொடுத்தாலோ 55(A) சட்ட பிரிவில் குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளின்படி, அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் கொடுத்து தினசரி நாளிதழ்களில் அது குறித்து விளம்பரம் வெளியிட்டு காவல்துறையிடம் இருந்து (NON TRACEANLE CERTIFICATE) கண்டுபிடிக்க முடியாத சான்று பெற்று வந்தால் தான் பதிவு செய்ய இயலும் என்கிற சட்ட வழிமுறைகள், இதனால் ஏற்படும் காலதாமங்கள், போன்றவற்றால் அவசரத்துக்கு சொத்துக்களை விற்க முடியாத சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
பெயிரா வேண்டுகோள்: எனவே, அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொது ஆவணங்களின் (Public Document) அடிப்படையில், ஆவணங்களை பதிவு செய்ய வழிவகை வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பதிவுத் துறையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு பல்வேறு சூழ்நிலைகளில் அசல் ஆவணங்களை இழந்த பொதுமக்கள் பலர் உயர் நீதிமன்றங்களின் உதவியை நாடி, அசல் ஆவணங்கள் இல்லை என்றாலும், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற வழக்குகளில், அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின.
மாவட்ட பதிவாளர்கள்: இந்த தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவினை பிறப்பித்து, அனைத்து மண்டல துணை அலுவலர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும், சார்பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள பதிவுத் துறையின் செயலினை பெயிரா பாராட்டி வரவேற்கின்றது.
எனினும் பதிவுத் துறையால் அனுப்பப்பட்ட மேற்கண்ட கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லாமல் ஆவண பதிவினை மேற்கொள்ள சார் பதிவாளர்கள் பலர் மறுக்கின்றனர். இதற்கு காரணம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சாராம்சங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினாலும் மேலும் பதிவு செய்வதன் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்கின்ற அச்ச உணர்வின் காரணமாகவும் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர்.
வழிகாட்டுதல்கள்: ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத் துறை தலைவர், இந்த பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வது சம்பந்தமாக சார் பதிவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், சரியான வழிகாட்டுதலுடன் கூடிய தெளிவான சுற்றறிக்கையினை தாங்கள் வெளியிட்டு தீர்வு காண உதவிட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications