தொகுதி குறைப்பு: மாநிலங்களுக்கு படையெடுக்கும் திமுக! மே.வங்கம்- கனிமொழி; கேரளா பிடிஆர்; ஆந்திரா-வேலு
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திமுகவின் மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்துக்கு கனிமொழி எம்பி, கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, ஒடிஷாவுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கடந்த மார்ச் 5-ந்ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைப்போம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் 22-ல் 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவும் முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இந்த கூட்டத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிஷா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் அழைக்கப்பட உள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் இது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி, ஆந்திர மாநிலத்துக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கேரள மாநிலத்துக்கு தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஒடிஷா மாநிலத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானங்கள்
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 10-ந் தேதி தொடங்கும் நிலையி திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.
மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ள
தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications