Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து!
டெல்லி: இந்த வாரம் நடைபெறும் சிறப்புக் கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026, தமிழக அரசியல் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இது தொகுதி மறுவரையறையை வேகப்படுத்துவது மட்டுமல்லாது, இதை எதிர்த்து வழக்கு தொடுப்பதையும் தடுக்கிறது.
இந்த மசோதா பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டுவரும் நோக்கில், தொகுதி மறுவரையறையை வேகப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சாரம்
தொகுதி மறுவரையறை குறித்த விவாதங்கள் எழுந்தபோதெல்லாம், மத்திய அமைச்சர்கள் ஒரு உறுதியை தென் மாநிலங்களுக்கு கொடுத்திருந்தார்கள். தற்போது இருக்கும் விகிதாச்சாரம் பாதுகாக்கப்படும் என்பதுதான் அது. இதுவரை 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்கள் முடக்கப்பட்டிருந்தன. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இந்த புதிய மசோதாவில், 'தற்போதுள்ள விகிதாச்சாரம் பேணப்படும்' என்று உறுதி கொடுக்கப்படவில்லை.
எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல், பொறுப்பு இல்லாமல் இருந்த வட மாநிலங்களக்கு அதிக எண்ணிக்கையைில் தொகுதிகள் உருவாக்கப்படும். ஆனால், தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
அரசியலமைப்பு டூ சட்டம்
இந்த மசோதாவில் இருக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை, எந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதுதான். தொகுதி மறுவரையறைக்கு எந்த மக்கள் தொகையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அரசியலமைப்பு தெளிவுப்படுத்தியிருக்கிறது. ஆனால், இனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டம் மூலம், எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வேண்டுமானாலும் அடிப்படையாக கொண்டு தொகுதி மறுவரையறை செய்யப்படும்.
உதாரணத்திற்கு 2001 மக்கள் தொகை கண்கெடுப்பில் வட மாநிலங்களில் அதிக மக்கள் தொகை இருக்கிறது எனில், அதை அடிப்படையாக கொண்டு வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும்.
ஜெரிமாண்டரிங் - எல்லை மறுவரை
புதிய மசோதவின்படி, தொகுதிகளின் எல்லைகளை தீர்மானிக்கும் அதிகாரம் மறுவரையறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். மிக முக்கியமான விஷயம் இந்த ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய முடியாது என்பது, ஜனநாயகத்தை கேள்வி எழுப்புவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications