சென்னை மட்டுமல்ல.. டெல்டாவையும் புரட்டிப்போட்ட மழை.. பலத்த காற்று.. கடல் கொந்தளிப்பு!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் இருந்து அங்கு கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் சென்னை மொத்தமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா எப்படி
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளது.

வேறு எங்கு
மேலும் சிதம்பரம், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர், நெல்லை, அரியலூர், காஞ்சிபுரம், கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை பெய்து வருகிறது.

அதிகமாக மழை
அதிக அளவில் மழை பெய்து வருவதால் டெல்டாவில் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கிறது. ஜனவரி தொடக்கத்தில் அறுவடை செய்வதற்காக இருந்த பயிர்கள் எல்லாம் மிக மோசமாக நீரில் மூழ்கி பாழாகி உள்ளது.

கடல் சீற்றம்
அதேபோல் ராமநாதபுரத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் முழுக்க பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications