சென்னை - திருவள்ளூர் - கோவைக்கு ‛ரெட் அலர்ட்’.. வேகமெடுத்த டெங்கு காய்ச்சல்.. எச்சரித்த சுகாதாரத்துறை
சென்னை: டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ‛ரெட் அலர்ட்' விடுத்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதனால் தொற்று நோய் உள்ளிட்டவை பரவ வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நோய் தொற்றில் இருந்து விடுபடலாம்.

இதற்கிடையே தான் தற்போது சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சலால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் டெங்கு காய்ச்சல் பரவல் காரணமாக சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கையை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் காய்ச்சல் பாதித்த 12,264 பேரில் 3,665 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் அருகே உள்ள திருவள்ளூரில் காய்ச்சல் பாதித்த 9,367 பேரில் 1,171 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் காய்ச்சல் பாதித்த 7,998 பேரில் 1,278 பேருக்கு டெங்கு உறுதியாகி உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கும் ‛ரெட் அலர்ட்' விடுத்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு பரவ முக்கிய காரணம் கொசுக்களாகும். ஏடிஸ் வகை கொசுவால் டெங்கு பரவுகிறது. மேலும் டெங்கு பாதித்த ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும்போதும் இந்த டெங்கு பரவும். பொதுவாக காய்ச்சல் ஒன்று அல்லது 2 நாட்களில் குணமாகிவிடும். ஆனால் அதற்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் டெங்கு பரிசோதனை அவசியம்.
டெங்குக்கு சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: டெங்கு பாதித்தோருக்கு அதிகப்படியான காய்ச்சல் இருக்கும் . தலைவலி இருக்கும். கண்ணின் பின்பகுதியில் வலி இருக்கும். தசை மற்றும் மூட்டு வலி இருக்கும், வாந்தி, அரிப்பு உள்ளிட்டவை இருக்கும்.
இரண்டாவது முறை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு வயிற்று வலி, அதிகப்படியான வாந்தி, மயம், மூக்கில் இருந்து ரத்தம் சொட்டுதல், அதிகப்படியான தாகம் எடுத்தல், உடலில் அதிகப்படியான சோர்வு இருக்கும்.
இதனால் காய்ச்சல் தொடரும் பட்சத்தில் பொதுமக்கள் உடனடியாக டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. மேலும் வீடுகளை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேங்கவிடாமல் பார்த்து கொள்வது நல்லது. இதன்மூலம் பொதுமக்கள் டெங்கு பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
டெங்கு காய்ச்சல் அனைத்து வயதினரையும் பாதிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்ளலாம். இதனால் அலட்சியம் காட்டாமல் அனைத்து வயதினரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது என்று பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications