மடிப்பாக்கத்தில் ராஜகோபாலனை மின்னல் வேகத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!.. துணை ஆணையரே நேரில் விசாரணை!
சென்னை கே கே நகரில் உள்ளது பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி. இந்த பள்ளியல் வணிகவியல் துறை ஆசிரியராக இருந்து வருபவர் ராஜகோபாலன்.
Recommended Video
இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ஒரு புகார் எழுந்தது. அதுபோல் முன்னாள் மாணவிகள், தற்போது படிக்கும் மாணவிகள் என 1000- க்கும் மேற்பட்ட மாணவிகள் புகாரில் கையெழுத்திட்டுள்ளனர்.

விசாரணை
இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என கூறியுள்ளார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.

ராஜகோபாலனை சுற்றி வளைத்த போலீஸ்
பின்னர் மடிப்பாக்கத்தில் அவரது வீட்டில் ராஜகோபாலனை சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரது வீட்டுக்கு காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவங்கள்
ராஜகோபாலனிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் புகார் கொடுத்த மாணவியை துணை ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து வருகிறார்கள்.

துரிதமான செயல்பாடு
மாணவிகளின் பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் திமுக அரசு துரிதமாக செயல்படுவது வரவேற்கத்தக்கது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த துணை ஆணையரே நேரடியாக பள்ளிக்கும், ராஜகோபாலனின் வீட்டுக்குள் சென்றது உண்மையில் நல்ல, துரிதமான நடவடிக்கை என பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications