தன்தேராஸ் நாளில் தங்கம் வாங்குங்க..குபேரனே வீட்டுல குடியிருப்பார்! நல்ல நேரம் எப்போது? வாங்குவது ஈசி
சென்னை: இந்த ஆண்டு தன்தேராஸ் (Dhanteras) 2025 அக்டோபர் 18ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் மிகுந்த ஆனந்தத்துடன் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த நாள் தங்கம், வெள்ளி போன்ற நகைகள், நாணயங்கள் மற்றும் புதிய பொருட்களை வாங்குவது சிறப்பான நன்மை தரும் நாளாக கருதப்படுகிறது. இந்நிலையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கம் வாங்கும் சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு தன்தேராஸ் (Dhanteras 2025) அக்டோபர் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் மிகுந்த ஆனந்தத்துடன் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக இந்த நாள் தங்கம், வெள்ளி போன்ற நகைகள், நாணயங்கள், புதிய பொருட்கள் வாங்குவது சிறப்பான நன்மை தரும் நாளாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்குவது மட்டுமல்லாமல், வீட்டிற்குள் புதிய ஆற்றல் மற்றும் வளம் நுழைவதாகவும் நம்பப்படுகிறது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முன்னர் தன்தேராஸ் நாளில் நகைக் கடைகளில் பெரும் கூட்டம் காணப்படும்.
தன்தேராஸ் 2025
"தன்தேராஸ்" என்ற சொல்லே இரண்டு சொற்களிலிருந்து இருந்து வந்தது. 'தன்' (செல்வம்) மற்றும் 'தேரஸ்' (திரயோதசி திதி). அதாவது, செல்வம் பெருகும் திருநாள் என்பதைக் குறிக்கிறது. இந்த நாள், தீபாவளி பண்டிகையின் தொடக்கமாகவும், செல்வம் மற்றும் ஆரோக்கியம் சேர்க்கும் ஆன்மீக சக்தி வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி, தன்வந்திரி தேவன் கடல் கடைந்தபோது அமிர்தக் கும்பத்தை கையில் ஏந்தி வெளிப்பட்ட நாள் இதுவாகும். அவர் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் ஒரே நேரத்தில் குறிக்கிறார். எனவே, இந்த நாளில் தங்கம் வாங்குவது ஆரோக்கியம் மற்றும் நிதி நலன் இரண்டும் சேர்வதாக நம்பப்படுகிறது.
தன்தேராஸ் சிறப்பு
இந்திய பாரம்பரியத்தில், தங்கம் வெறும் ஆடம்பரப் பொருள் அல்ல. அது பூமியின் நெருப்பு ஆற்றலின் வடிவம் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. வீட்டுக்குள் தங்கம் வருவது, பூமியின் நேர்மறை ஆற்றல் நுழைவதைப் போலவே கருதப்படுகிறது. தங்கத்தின் ஒளி லட்சுமி தேவியின் பிரகாசத்தை பிரதிபலிக்கிறது. அதனால் தன்தேராஸ் நாளில் தங்கம் வாங்குவது, செல்வம், வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் சேர்க்கும் சுபநேரம் என நம்பப்படுகிறது.
தங்கம் வாங்குதல்
பாரம்பரிய நூல்களின்படி, தன்தேராஸ் நாளில் வாங்கப்படும் நகைகள் அல்லது தங்கத்தை உடனே அணிவது பரிந்துரைக்கப்படவில்லை. முதலில் அதை வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜை அறையில் வைத்து ஒரு விளக்கேற்றி லட்சுமி பூஜை செய்ய வேண்டும். பின்னர் குடும்பத்தினர் அதை அணியலாம். தங்கம் மட்டுமல்ல, பித்தளை, வெள்ளி, செம்பு பாத்திரங்களை வாங்குவதும் அதே அளவு சுலபமாகக் கருதப்படுகிறது. இவை பூமியுடன் நேரடியாக இணைந்த உலோகங்கள் என்பதால், வீட்டில் ஆரோக்கியம் மற்றும் வளம் சேர்க்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது.
மகாலக்ஷ்மி நேரம்
2025 ஆம் ஆண்டு தன்தேராஸ் அக்டோபர் 18 அன்று வருகிறது. ஜோதிடர்களின் கணிப்பின்படி, அந்த நாளில் மாலை 6.45 மணி முதல் 8.30 மணி வரை தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பான "மகாலக்ஷ்மி சகுன நேரம்" எனக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தங்கம் வாங்குவது, குடும்பத்துக்கு நீண்டநாள் செல்வமும் ஆரோக்கியமும் வழங்கும் என நம்பப்படுகிறது.
தங்க டெலிவரி
இந்நிலையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கம் வாங்கும் சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. முன்னணி டெலிவரி தளங்களான Blinkit, Zepto, Swiggy Instamart ஆகியவை தன்தேராஸ் சிறப்பாக "Gold Delivery" சேவையை தொடங்கியுள்ளன. இதன் மூலம் மக்கள் தங்களின் மொபைல் ஆப்களில் சில நிமிடங்களில் தங்க நாணயம், வெள்ளி பொருட்கள், தங்க பட்டைகள் போன்றவற்றை ஆர்டர் செய்து, வீட்டிலேயே விரைவாக பெற்றுக்கொள்ளலாம்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தங்கம்
Blinkit நிறுவனம் தனது ஆப்பில் 0.5 கிராம் முதல் 10 கிராம் வரை தங்க நாணயங்கள் கிடைக்குமென கூறியுள்ளது. இவை அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற 995 மற்றும் 999 purity BIS ஹால் மார்க் தங்கமாக வழங்கப்படுகின்றன. அதேபோல், Zepto மற்றும் Instamart தளங்களும் தங்கம், வெள்ளி நாணயங்களுடன் பூஜை பெட்டிகள், தீபங்கள், லட்சுமி- விநாயகர் சிலைகள் போன்ற தன்தேராஸ் பண்டிகை பொருட்களையும் விற்பனை செய்கின்றன.












Click it and Unblock the Notifications