Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வந்து தாயை கொன்ற கொடூரம்.. தஷ்வந்த் வழக்கின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை மாங்காடு அருகே 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கீழமை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கின் பின்னணியை பார்க்கலாம்.

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாபு - ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மகள் ஹாசினி. 6 வயதான ஹாசினி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென மாயமானாள். இதனால் பதறி துடித்த பெற்றோர் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தனர். தொடர்ந்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டது.

dhasvanth-case-freed-after-heinous-crime-then-killed-his-own-mother

சாப்ட்வேர் இன்ஜினியர் தஷ்வந்த்

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் தஷ்வந்த் (வயது 24) என்பவர் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. தமிழகத்தையே இந்த கொலை சம்பவம் உலுக்கியது.

இதையடுத்து, தஷ்வந்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். குண்டர் சட்டத்தில் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். சிறுமியை கொலை செய்துவிட்டு... சிறுமியின் உள்ளாடைகளை தனது அறையில் ஒளித்து வைத்து இருந்ததும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தாயையும் கொன்ற கொடூரம்

புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைதானார். இந்த வழக்கிலிருந்தும் வெளியே வந்த தஷ்வந்த், கொடூரத்தின் உச்சமாக தனது தாயை கொன்றுவிட்டு தப்பி ஓடினார். மகனுக்கு ஜாமீன் கிடைத்ததால் மகிழ்ச்சியில் இருந்த தஷ்வந்தின் தந்தைக்கு, "இப்படி ஒரு தவறு செய்துவிட்டோமே" என கூனி குறுகும் அளவிற்கு கொடூரத்தை அரங்கேற்றினார் தஷ்வந்த்.

தாயைக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை தஷ்வந்த் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து தனிப்படை அமைத்து தஷ்வந்தை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் மும்பையில் கைதானார். கடந்த 2018 டிசம்பர் 6ஆம் தேதி மும்பையில் கைதானார். கைதாகும் போது போலீசை தாக்கிவிட்டு லாட்ஜிலிருந்து தப்பிக்க முயன்றார். இதன் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறழ்சாட்சியாக மாறிய தந்தை

தஷ்வந்த் மீது சிறுமி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு, தாய் கொலை என இரண்டு வழக்குகள் இருந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கு 2018ம் ஆண்டு மரண தண்டனையை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில், 2வது முறையாக ஜாமீனில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதான வழக்கில் தஷ்வந்த் விடுதலை ஆனார். தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.

போதிய ஆதாரங்கள் இல்லை என

தஷ்வந்தின் தந்தை இந்த வழக்கில் மகனுக்கு எதிராக சாட்சி வழங்கினார். ஆனால் அவரே பிறழ்சாட்சியாக மாறியதால் வழக்கு தலைகீழாக மாறியது. தஷ்வந்த் தனது மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கிலும் தற்போது விடுதலையாகியுள்ளார்.

போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், குற்றம் சந்தேகத்திற்கு இன்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுதலையாகியுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் போதிய அளவில் தஷ்வந்துக்கு எதிராக இல்லை என்பதாலும், முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தும் சுப்ரீம் கோர்ட் விடுவித்து இருக்கிறது.

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கீழமை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், மேல் முறையீட்டு வழக்கில் விடுதலையாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+