சென்னை மண்ணில் 'தல' தோனி கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. சி.எஸ்.கே பேன்ஸ் செம ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த 14-வது ஐ.பி.எல் போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி(சி.எஸ்.கே) கெத்தாக கோப்பையை கைப்பற்றியது. ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட சி.எஸ்.கே அணிக்கு பாராட்டு விழா நடத்த சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கோப்பையை கைப்பற்றிய சி.எஸ்.கே அணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடந்தது. இந்த பாராட்டு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்

சி.எஸ்.கே.வுக்கு பாராட்டு விழா
மேலும், பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உள்ளிட்ட பலர் பாராட்டு விழாவில் பங்கேற்றனர். விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கத்தில் தோனி அமர்ந்து இருந்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், '' நான் ஒரு முதல்வராக இல்லாமல் தோனியின் ரசிகராக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன். எனது தந்தை கருணாநிதியும் தோனியின் ரசிகர்தான். தமிழர்கள் பச்சை தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர்'' என்று பெருமையுடன் ஸ்டாலின் பேசினார்.

தல தோனி பேச்சு
மேலும், ஜெய்ஷா, கபிதேவ் ஆகியோரும் தோனியை பாராட்டி பேசினார்கள். இதனை தொடர்ந்து பேசிய தோனி கூறியதாவது:- சென்னை மிகச்சிறந்த நினைவுகளை எனக்கு தந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல்.லில் சென்னை அணியில் இடம் கிடைக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. சி.எஸ்.கே போட்டி எங்கு நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

இந்த ஒற்றை வார்த்தை
சென்னை ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீதான புரிதல் அதிகம் இருக்கிறது. சென்னை அணியின் ரசிகர்கள் நாடு முழுவதும் உள்ளனர். இது பலதரப்பிலும் விரிவடைய வேண்டும். சென்னையில்தான் எனது கடைசி ஐ.பி.எல் போட்டி இருக்கும். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி. அடுத்த 5 ஆண்டுகளாக இருந்தாலும் சரி'' என்று தோனி பேசினார்.

ரசிகர்கள் உற்சாகம்
தல தோனி அடுத்த ஆண்டு சி.எஸ்.கே.வுக்காக விளையாடுவாரா? என்று பலவேறு தரப்பிலும் கேள்வி எழுந்து வந்தது. ஐ.பி.எல் தொடர் முடிவடைந்தவுடன் இந்த விவாதம் அதிகம் எழுந்தது. இந்த நிலையில் ''எனது கடைசி டி20 போட்டி சென்னையில்தான் இருக்கும்'' என்று சென்னையிலேயே தோனி கூறிய நிலையில் தோனி அடுத்த ஐ.பி.எல்.லில் சி.எஸ்.கே.வுக்கு விளையாடுவது உறுதியாகி விட்டது. இதனால் சென்னை ரசிகிர்கள் உற்சாகத்தில் மிதந்துள்ளனர். தோனியின் பேச்சை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications