சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவை சேர்ந்த பிரபல நடிகை மீது பகீர் புகார்.. போலீசுக்கு போன சினேகன்.. ஜெயலட்சுமியை ஞாபகம் இருக்கா

நடிகை ஜெயலட்சுமி மீது பாடலாசிரியர் சினேகன் போலீசில் வழக்கு தொடர்ந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக பிரமுகரும், பிரபல நடிகையுமான ஜெயலட்சுமி மீது, பாடலாசிரியர் சினேகன் அளித்துள்ள புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Snekan | Coffee Shop போலாம்ன்னு கூப்பிடுறாங்க, Serial நடிகை இப்படி பண்ணலாமா ? *Tv

    பிரபல பாடலாசிரியரும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியுமான சினேகன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்தார். அந்த மனுவில் அவர் சொல்லி உள்ளதாவது:

    நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை பதிவு செய்து நடத்தி வருகிறேன். இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை செய்து வருகிறேன்.

    ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆக.5-ல் கறுப்பு உடையுடன் போராட்டமா? காங்கிரஸுக்கு பாஜக கண்டனம் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய ஆக.5-ல் கறுப்பு உடையுடன் போராட்டமா? காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

     பாஜகவில் நடிகை

    பாஜகவில் நடிகை

    இந்த நிலையில் என்னுடைய அறக்கட்டளை பெயரை சின்னத்திரை பிரபலமான ஜெயலட்சுமி பயன்படுத்தி நிதி வசூலிப்பதாக வருமான வரித்துறை மூலம் எனக்கு தகவல் வந்தது. நான் எனது மானேஜரை அனுப்பி விசாரித்த போது, அவர் போலியான முகவரி, இணையதளத்தை கொடுத்து என்னுடைய அறக்கட்டளையை இயக்குவது தெரியவந்தது. எனவே மோசடியில் ஈடுபட்ட ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது அறக்கட்டளையில் இயங்கும் போலி இணையதளத்தை முடக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்..

     ஃபவுண்டேஷன்

    ஃபவுண்டேஷன்

    புகாரை தந்தபிறகு, செய்தியாளர்களை சினேகன் சந்தித்து பேசியதாவது: "கடந்த 2015ம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு என்னுடைய நண்பர்கள் என்னிட அதிர்ச்சி தரும் விஷயத்தைச சொன்னார்கள்... நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளையின் பெயரில் வெப்சைட் தொடங்கி, அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாக சொன்னார்கள்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்... அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் என்னிடம் விசாரணை செய்தனர்... என்னுடைய அறக்கட்டளை வரவு செலவுகளை கேட்டார்கள்.. அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது... இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் 2 முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. அதனால், இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.

     பாஜக பிரச்சாரம்

    பாஜக பிரச்சாரம்

    ஜெயலட்சுமியை பொறுத்தவரை, டிவி சீரியல்களில் மிக பிரபலம்.. சினிமாக்களிலும் நடித்துள்ளார்.. பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டனர்.. பாஜக சார்பாக சட்டசபை தேர்தலிலும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் மீது ஏற்கெனவே பல மோசடி வழக்குகள் உள்ளது.. மகளிர் சுய உதவிக் குழுவினர் அளித்த மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

     மிட்நைட் மிரட்டல்

    மிட்நைட் மிரட்டல்

    அதாவது, கடன்வாங்கிய பெண்கள், மாதமாதம் இஎம்ஐ கட்டிய பிறகும், அதெல்லாம் வட்டி பணம், அசல் எங்கே? என்று நடிகை கேட்டு மிரட்டுவதாகவும், இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கமிஷனர் அலுவலகத்தில் இவர் மீது புகார் ஒன்றை தந்திருந்தனர்.. இப்படி பல புகார்கள் ஜெயலட்சுமி மீதுள்ள நிலையில், இன்னொரு புகாரை அதிலும் தமிழகத்தின் பிரபலமான சினேகனே தந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Did actress jayalakshmki cheat and Snehan complaint against actress bjp member jayalakshmi in chennai commissioner office office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X